Posts

Showing posts from 2017

அக்கினியாற்றில் கறம்பக்குடி அருகே புதையுண் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டுமானம்

Image
அக்கினியாற்றில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டுமானம் கறம்பக்குடி அருகே அக்கினியாற்றில் புதையுண்டு இருந்த பழமையான கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டு செய்தி வெளிவந்தது. இந்த செய்தி கண்டு அன்றும் இன்றும் [August 05.2017 October 04.2017] ஆய்வு செய்யப்பட்டது. இது ஒரு தடுப்பணையாக(ஆற்று  நீரை இரண்டாகப் பிரிக்கும்) இருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த சுவர் போன்ற அமைப்பானது கோவில் கட்டுமான உறுப்புக்கள் இன்றியும், செங்குத்துச் சுவராக இன்றியும் சற்று சாய்கோணத்தில் (செங்குத்தாக இல்லாமல் மேலே செல்ல செல்ல ஒடுக்கமாக) நீரைப் பிரித்து அனுப்பும் தடுப்பாக இருந்துள்ளது. இதனைத் தற்போது பெய்த மழைக்குப்பிறகு தெளிவாகத் காணலாம். அருகேயுள்ள தடுப்பணை அப்போதைய முதலமைச்சரால்  திறக்கப்பட்டு நீரை பிரித்து குளங்களுக்கு நீர் வழங்கி பயன்படுத்தப்படுகிறதோ அதேபோல் இந்த கருங்கல் தடுப்பணையும்   ஒரு நீர் திருப்பியாகவே செயல் பட்டு இருந்திருக்க வேண்டும். தற்போதும் அக்கினியாற்றின் உபரிநீர் பிரிந்து  அருகேயுள்ள குளங்களுக்கு நீரை வழங்குகிறது. #இணைவோம்# வரலாற்று உண்மையினை வெளிப்படுத்துவோம்.