Posts

Showing posts with the label தொல்லியல்

கார்பன் டேட்டிங்க் என்றால் என்ன ?

Image
 கனகவல்லி என்ற பள்ளி மாணவி அவள் குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் மிட்டாய் கொடுத்தாள். அனைவரும் மிட்டாய் எடுத்துக் கொண்டு “ உனக்கு பிறந்தநாளா” என்று கேட்டார்கள். “இல்லை ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களை கார்பன் டேட்டிங் முறையில் சோதித்ததில் தமிழர் நாகரீகம் 3000 ம் ஆண்டு பழமையானது என்று நிருபிக்கப்பட்டுள்ளது ” என்றாள். இதைக் கேட்டு அனைவரும் அவளுக்கு வாழ்த்து சொன்னார்கள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கனகவல்லியின் அம்மா உனக்கு இது தேவையில்லாத வேலை” என்று எச்சரித்தார். “அம்மா நாம் யாரையாவது எந்த கலாச்சாரத்தையாவது குறை சொன்னோமா. நம் கலாச்சாரத்துக்கு ஒரு அறிவியல் அடிப்படை ஆதாரம் கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியை தெரிவிக்கிறோம் அவ்வளவுதானே” என்று பதில் சொல்லிவிட்டாள்.   இப்படி அனைவருக்கும் மிட்டாய் கொடுத்து வரும் போது அவளுக்கு பிடித்த ரிச்சா ஆண்டிக்கும் மிட்டாய் கொடுத்தாள். ரிச்சா ஆண்டி செய்தியைக் கேட்டு பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தெரிவித்து விட்டு கனகவல்லியிடம் “சரிப்பா Carbon dating carbon dating என்று சொன்னாயே கார்பன் டேட்டிங்க் என்றால் என்ன? “ “சத்தியமா...

ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம்

Image
ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் ஒரத்தநாடு தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ளது. இங்கு ஆய்வுசெய்யப்பட்ட முத்தம்மாள் சத்திரம் 10 ° 37’ 40.2” வடக்கு அட்சரேகையிலும் , 79 ° 15 ′ 07.5 ″ கிழக்கு தீர்க்கரேகையிலும் அமைந்து ள்ளது . இவ்விடம் தஞ்சாவூரிலிருந்து உளூர் வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் 35 கி.மீ தொலைவில் உள்ளது . காவிரியின் தென்கரையில் உள்ள இவ்வூர் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஊராக மராட்டியர் ஆட்சி காலத்தில் தலைத்தோங்கி இருந்தது. ஒரத்தநாடு நகர அமைப்பானது 18, 19 ஆம் நூற்றாண்டில் திட்டமிட்டு கட்டப்பட்டது இதில் இன்றும் இந் நகரத் தெருக்கள் ஒன்றோடு ஒன்று வெட்டிச்செல்வதைக் காணமுடிகிறது. இங்கு காசி விசாலாட்சி, உடனுறை காசிவிஸ்வநாதர் ஆலயம், முத்தம்மாள் சத்திரம், அன்னச்சத்திரம், சவுக்கண்டி, வீரஆஞ்சநேயர் கோயில் மற்றும் தேர் முட்டிகள் என வரலாற்று எச்சங்கள் உள்ளன.   தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய அரசர்கள் 1743 முதல் 1837 வரை பெரிய, சிறிய சத்திரங்களை தஞ்சாவூர் முதல் தனுஷ்கோடி வரை அமைத்தனர். இவற்றில் தஞ்சாவூர் - காஞ்சி வீடு சத்திரம், சிரேயஸ் சத்திரம், சூரக்கோட்ட...

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொல்லியல் சான்றுகள்

Image
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொல்லியல் சான்றுகள் பழையகற்காலம் இராபர்ட் புரூஸ்புட் அவர்கள் தமிழகத்தில் பல இடங்களில் கற்காலக் கருவிகளைக் கண்டுபிடித்தார் , அவர் தஞ்சாவூர் பகுதியில் வங்கானங்குடிகாடு எனும் இடத்தில் கற்காலக் கருவி கிடைத்ததாக க் குறிப்பிடுகின்றார் . தற்போது மேற்கொண்ட ஆய்வுகளில் தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பல இடங்களில் குறைந்த தரமுள்ள செர்ட்டி குவார்ட்சைட் கற்களால் செய்யப்பட்ட பழங்கற்காலக் கருவிகள் கிடைக்கின்றன , இவை பழங்கற்கால மக்கள் பரவலாக இப்பகுதியில் வாழ்ந்ததை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன .  புனல்குளத்தில் கிடைத்த கருவி பழையகற்காலம் 1 புனல்குளம் ( மகாராஜசமுத்திர வட கரையில் ) தஞ்சாவூர்/புதுக்கோட்டை பழையகற்காலக் கருவிகள் 2 மனோஜிபட்டி தஞ்சாவூர் பழையகற்காலக் கருவிகள் , தொழிற்கூடம் 3 பிள்ளையார்பட்டி தஞ்சாவூர் பழையகற்காலக் கருவிகள் 4 திருக்கானூர்பட்டி தஞ்சாவூர் பழையகற்காலக் கருவிகள்      ...