சிறுகதை- ஆசிரியர்: பா. ச. பாலசிங்


அனைவரும் பாண்டியப் பேரரசு என்றால் என்ன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். சிறிய புத்தகமாக இருந்தாலும் உள்ளிருக்கும் கருத்துக்கள் ஆழமானவை. Short and sweet என்று சொல்லலாம்.
ஆசிரியர் பா. ச. பாலசிங் அருமையாக எழுதியுள்ளார்.

 

 




கதையில் வருபவர்கள் பாண்டி செல்வம், தங்கை உமையம்மாள், தந்தை முத்துமாலை, தாய் இராஜேஸ்வரி ,நண்பன் குமார், ஸ்னோலின் கணக்கு மிஸ் மற்றும் அண்ணாத்துரை.

பாண்டி செல்வம் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தான். அவன் தங்கையும் அதே பள்ளியில் முதல் வகுப்பு படித்து கொண்டிருந்தாள். தந்தை மளிகைக் கடை வைத்திருந்தார். பள்ளி முடிந்ததும் இருவரும் கடைக்கு வந்து விளையாடி கொண்டிருப்பார்கள், இரவு எட்டு மணிக்கு கடை அடைத்துவிட்டு எல்லோரும் வீடு திரும்புவார்கள். இரவில் பாண்டி செல்வம் மற்றும் தங்கை தனது தந்தையுடன் கதை கேட்டுவிட்டு தயங்குவார்கள். அன்று பாண்டி கேட்ட கதை, "பாண்டியப் பேரரசு".
தந்தை சொன்னார் இந்த கதையை இரகசியமாக வைத்துக்கொள் யாரிடமும் சொல்ல கூடாது என்றார். ஏன் என்று கேட்டான், இது உண்மை கதை அதனால் வெளியில் யாருக்கும் சொல்லாதே என்றார்.
நமக்கு பேரரசு ஒன்னு இருந்துச்சு, அதோட பேரு பாண்டியப் பேரரசு.

பேரரசுன்னா என்னப்பா?

பேரரசுன்னா... பெரிய அரசு. அரசுக்கெல்லாம் அரசு. பல நாடுகளை ஆளும் அரசு. அதான் பேரரசு. இப்பவும் பேரரசு இருக்காப்பா என்று கேட்டான் பாண்டி செல்வம்.

இரண்டாயிரம் வருஷம் இருந்த பாண்டியப் பேரரசு இராம ராஜ்ஜியத்திடம் சூழ்ச்சியால் தோற்று போச்சு.. இப்போ நாம வெறும் அடிமையா இருக்கும் பாண்டிய நாடுதான். வடக்குல அயோத்திங்குற எடத்துல இருந்து வந்தவர்கள் தான் இராம ராஜ்ஜியத்து ஆளுங்க. பேரரசை விட வலிமை குறைந்தவர்கள். ஆனால் சூழ்ச்சி பண்ணுவாங்க. சூழ்ச்சி செஞ்சு நம்ம பேரரசை அழிச்சுட்டாங்க.

அப்போ, இனி பாண்டியப் பேரரசே வராதாப்பா ?

வரும் டா. நீ நல்லா முட்டை, மீன், ஆடு, கோழி, மாடு, கீரை, காய்கறின்னு சாப்பிட்டு பலசாலியா, அறிவாளியா மாறினா, நீயே பாண்டியப் பேரரசை மீண்டும் கொண்டு வந்திடலாம் என்றார் தந்தை.

பாண்டி செல்வம் கதை கேட்டு அதற்கு ஏற்றவாறு தன்னை தயார்படுத்திக் கொண்டு பாண்டியப் பேரரசை கொண்டுவந்தான், எப்படி? யாருடன் சேர்ந்து இந்த பேரரசை கொண்டுவந்தான் என்பதே இதன் கரு.

படித்ததில் மகிழ்ச்சி. 





Reading Marathon 2021
17/50
ID: RM 00211
புத்தகம்: பாண்டியப் பேரரசு
ஆசிரியர்: பா. ச. பாலசிங்
பக்கங்கள்: 31
அமேசான் கிண்டில் புத்தகம்.


Comments

Popular posts from this blog

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொண்ட அகழாய்வு

கல்வெட்டு ஆராய்ச்சிக்கு படிப்பு

சுண்ணாம்புக் காரை அரைக்கும் கல் சக்கரம்