கல்வெட்டு ஆராய்ச்சிக்கு படிப்பு


வரலாற்று தகவல்களையும் தொன்மையையும் படித்து அறிந்து கொள்வது என்பது ஒரு சுவாரசியமான அனுபவம். அவை அரிய புத்தகங்களோடு நின்று விடாமல் முதன்மைச் சான்றுகளாகத் திகழும் கல்வெட்டுகள்,  தொல் பொருட்கள் கிடைக்கும் பகுதிக்கு நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்வது சுவாரசியத்தை அதிகரிக்கும். அவ்வாறே கல்வெட்டு (எழுத்து)ஆராய்ச்சியானது பாறைகள், கோவில் சுவர்கள், தூண்கள், செப்பேடுகள், ஓலைச்சுடிகள், தாள் ஆவணங்கள் போன்றவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள எழுத்துகளையும், ஓவியங்களையும், குறியீடுகளையும் ஆய்வு செய்வது ஆகும்.

கல்வெட்டு ஆராய்ச்சிக்கு ஒரு படிப்பு:

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் இயங்கி வரும் கல்வெட்டு ஆராய்ச்சி நிறுவனம் (Institute of  Epigraphy) கல்வெட்டு, தொல்லியல், அகழாய்வில் முதுகலை டிப்ளமா படிப்பை (Post Graduate Diploma in Epigraphy, Archaeology, Excavation) வழங்கி வருகிறது. பாரம்பரியமிக்க இக்கல்வி நிறுவனம் சென்னை எழும்பூரில் (குழந்தைகள் அரசு மருத்துவமனை அருகில்) தமிழ் வளர்ச்சி வளாகத்தில் இயங்கி வருகிறது.
ஓராண்டு காலம் கொண்ட இந்தக் கல்வெட்டு ஆராய்ச்சி டிப்ளமோ படிப்பு 1973-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இலவசமாகவும் இத்துடன் மாதம்தோறும் பயிற்சி உதவித்தொகையாக ரூ. 4,000 வழங்கப்படுகிறது.  

கல்வித் தகுதி:
          தமிழ், வரலாறு, சமஸ்கிருதம், பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் ஆகிய பாடங்களில் எம். ஏ. பட்டம் பெற்றவர்கள் இப்படிப்பில் சேரலாம். பாடம் மட்டுமின்றி களப்பயிற்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் வரலாற்றுச்சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று ஆய்வில் ஈடுபடலாம்.
          கல்வெட்டு ஆராய்ச்சி டிப்ளமா படிப்பை முடித்தவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வெழுதி தமிழக தொல்லியல் துறையில் தொல்லியல் அலுவலர் (Archaeological Officer), காப்பாட்சியர் (Curator), கல்வெட்டாய்வாளர் (Epigraphist), இளநிலை கல்வெட்டாய்வாளர் (Junior Epigraphist),  ஆகலாம்.

விண்ணப்பித்தல்:
          இந்த கல்வெட்டு ஆராய்ச்சிப் படிப்புக்குத் தொல்லியல் துறை  ஆண்டுதோறும் அறிவிப்பு ஜுன்மாத இறுதியில் வெளியிடும். இதில் சேர விரும்புவோர் தங்கள் பெயர், முகவரி, கல்வித்தகுதி, இனம் ஆகிய விபரங்களுடன் “ஆணையர், தொல்லியல்துறை, தமிழ்வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-8” என்ற முகவரிக்கு ஜுலையில் அறிவிப்பில் வெளியாகும் இறுதி தேதிக்குள் அனுப்ப வேண்டும். இது தவிர tnarch@tn.nic.in மற்றும் archcommissioner@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கும் விண்ணப்பங்களை அனுப்பலாம். பயிற்சி வகுப்பு ஆகஸ்டு மாதம் தொடங்கும்.
மேலும் விபரங்களுக்கு : www.tnarch.gov.in/

Comments

  1. எமது புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக குழுவால் அடையாளம் காணப்பட்ட நண்டம்பட்டி பராந்தகன் கல்வெட்டு.

    இதை பயன்படுத்தியமைக்கு
    நன்றி
    ஆ.மணிகண்டன்

    தொல்லறிவியல் துறை
    தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்.

    ReplyDelete
    Replies
    1. தஞ்சை பல்கலை கழகத்தில் இப்படிப்பு உள்ளதா? தொலைதூரக் கல்வியில் எப்படி படிப்பது விபரம் தேவை.இருப்பிடம் நெல்லை.

      Delete

Post a Comment

Popular posts from this blog

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொண்ட அகழாய்வு

சுண்ணாம்புக் காரை அரைக்கும் கல் சக்கரம்