அறந்தாங்கி ஆண்டாகோட்டைக் கல்வெட்டு

அறந்தாங்கி ஆண்டாகோட்டைக் கல்வெட்டு

          புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆண்டாகோட்டைக்கு முன்பாக உள்ள மருதங்குளத்துக்கரையில் மருதம்மாகோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு முன்பாக சாலையின் ஓரம் ஒரு கல் நடப்பட்டுள்ளது. இதில் 17 வரிகளைக் கொண்ட தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. 










1.பிறபவ ²  சித்தி
2.ரை ± 2 ° நரசா
3. நாயக்கத் தொண்
4.டைமானார் புத்தி
5.ரன் இரங்கல் மீட்
6. ட பெருமாள் தன்
7.மஆக திருவம்பல
8.வன் எ[ன்ற] பேரா
9.லே இறையி[லி]த் தன்
10.மஆக வெட்டினே ந்
11.இந்த தன்மத்திலே இ
12.றைத்தவன் கெங்கை
13.கரையில் காராம்
13.பசுவையும் பிரா
14.மணனையும் மாதா
15.பிதாவையும் கொன்
16.ற பாவத்திலே போக
17.கடவானாகவும்°
           இந்த கல்வெட்டில் திவம்பலவன் எனும் பெயரால் வரிச்சலுகை இறையிலியாக தானம் செய்த செய்தி இடம் பெற்றுள்ளது. இங்குள்ள கோயிலைச் சிலர் வழிபட்டு வருவதாகவும், ஒரு பெண் இறந்ததின் காரணமாக இக்கோவில் கட்டப்பட்டதாகவும் வழிபட்டு வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொண்ட அகழாய்வு

கல்வெட்டு ஆராய்ச்சிக்கு படிப்பு

சுண்ணாம்புக் காரை அரைக்கும் கல் சக்கரம்