தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொண்ட அகழாய்வு




அகழாய்வுகள்

தமிழ்நடு அரசு தொல்லியல் துறை தமிழகத்தில் பல இடங்களில் அகழாய்வு செய்துள்ளது. திருத்தங்கல், அழகன்குளம், ஆனை மலை, மதுரை கோவலன் பொட்டல், பூம்புகார் (காவேரிப்பூம்பட்டினம்), கொடுமணல், கொற்கை, கரூர், போளூவாம்பட்டி, திருக்கோயிலூர், கங்கைகொண்டசோழபுரம், உக்கிரன்கோட்டை, கண்ணனூர், படைவீடு, பாஞ்சாலங்குறிச்சி ஆகிய இடங்களிலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பழையாறை, குறும்பன்மேடு ஆகிய இடங்களிலும் அகழாய்வு செய்துள்ளது.
பழையாறை
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ள தொன்மையான ஊர். இடைக்காலச் சோழர்களின் இரண்டாவது தலைநகரான பழையாறையில் தமிழ்நடு அரசு தொல்லியல் துறை 1984 ஆம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. இதில் கூரை ஓடுகள் (Roofing Tiles) செங்கற்கள், இடைக்கால சிவப்பு, கறுப்பு நிற மட்கலன்களும் மற்றும் போர்சிலின் பீங்கான் ஓடுகளும் கிடைதுள்ளன. அகழாய்வில் குறிப்பிடத் தக்கவகையில் அலங்கரிக்கப்பட்ட வண்ணம் பூசப்பட்ட பானை ஓடுகளும் கிடைதுள்ளன. இவற்றைத் தவிர கண்ணாடி வளையல்கள், சங்கு வளையல்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் மற்றும் செப்பு ஆணிகளும் சிறிய செப்புப் பாத்திரமும் கிடைத்துள்ளது.
Thulasiraman, ‘Excavation at Palaiyarai’ Tamil Civilization, Vol.5 No 1 & 2. 1987 I.A.R., 1983-84

குரும்பன்மேடு
          தஞ்சாவூர் நகரத்திலிருந்து மேற்கே குறும்பன்மேடு அமைந்துள்ளது. சோழர்களின் தலைநகரமான தஞ்சாவூரில் அவர்களது அரண்மனைப் பகுதி எங்குள்ளது என்பதைக் கண்டறிய தமிழ்நடு அரசு தொல்லியல் துறை 1984 ஆம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. இதில் சோழர்காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகளும்  கூரை வேயப் பயன்படுத்தப்பட்ட நீளமான ஓடுகளும், செங்கற் பகுதி, சுடுமன் பொம்மைகள், மணிகள், மற்றும் சீன நாட்டுப் பானை ஓடுகளும் கிடைத்துள்ளன.

Comments

Popular posts from this blog

சுண்ணாம்புக் காரை அரைக்கும் கல் சக்கரம்

கல்வெட்டு ஆராய்ச்சிக்கு படிப்பு