தஞ்சாவூர் மாவட்ட பாதுகாக்கப்பட்ட சின்னங்கள்





தஞ்சாவூர் மாவட்ட பாதுகாக்கப்பட்ட சின்னங்கள்


தஞ்சாவூர் மாவட்டத்தில் தொல்லியல்  துறையின் கட்டுப்பாட்டில் எட்டு நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அரண்மனை வளாகத்தில் மராத்தியர் தர்பார் கூடம், சர்ஜாமாடி,  மணிக்கோபுரம் , ஆயுத கோபுரம் மற்றும் மாவட்டத்தில் நாகநாதசுவாமி கோயில்,  சடையார் கோவில் -திருச்சின்னம் பூண்டி, மனோரா- சரபேந்திர ராஜப்பட்டினம், மீபெரும் நெற்களஞ்சியம்- திருப்பாலைத்துறை ஆகிய சினங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது.
தஞ்சை அரண்மனை
மராத்தியர் தர்பார் கூடம்
அரண்மனை வளாகத்தில் தர்பார் கூடம், மராத்திய மன்னன் சகாஜியினால் திருத்தி கி.பி. 1684 கட்டப்பட்டது. இரு பெரும் மண்டபங்களைக் கொண்டதாக ஒரு திறந்தவெளி முற்றத்துடன் அமைந்துள்ளது.  மண்டபத்தின் முன் பகுதியில் மரத்தூண்களுடன் கூடிய தாழ்வாரம்  கூரை வேயப்பட்டுள்ளது.  இங்கிருந்து சில படிகள் மீது ஏறிச்சென்று தர்பார் மண்டபத்தை அடையும் வகையில் ஒரு மேடையும் உள்ளது. இம்மேடையானது ஒரே கல்லால் ஆனது. இதிலிருந்தே அரசருக்கு பட்டம்சூட்டும் நிகழ்வு அரசவையும் நடைபெற்றது. மேலும், இம்மைய மண்டபத்தின் நடுவில் கிழக்கு சுவற்றை ஒட்டியவாறு மரத்தினால் செய்யப்பட்ட ஒரு தர்பார் மேடை உள்ளது. இது நீள்சதுரக் கருங்கல்லால்ஆன தளத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. இம்மேடையின் மேற்கூரை கண்ணாடிகள் பதிக்கப்பட்டு எழிலுற காட்சியளிக்கிறது. மைய மண்டபமானது துண்கள் தாங்குகின்ற வகையில் வளைவு விதானங்கள் கொண்டதாகவும்  இதில் சுதை உருவங்கள் மற்றும் வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளது. சுவரை ஒட்டியுள்ள பத்து தூண்களிள் மேல் திருமாலின் பத்து அவதாரங்கள் சுதை உருவங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வடக்குச் சுவற்றில் நாயக்கர் காலத்தில் தீட்டப்பட்ட ஓவியத்தின் மேல்  மராட்டிய மன்னர் கால ஓவியங்கள்  தீட்டப்பட்டுள்ளதும், இம்மைய மண்டப தர்பார் மேடை ஒட்டி வடக்கு நேக்கி செல்லும் வகையில் சுரங்கப்பாதை இருந்தது இத்துறையால் கண்டறியப்பட்டது.

Mahrattas Durbar Hall
          The Durbar hall (Royal Court) of the Palace Complex was renovated by Mahratta King Sahaji in the 1684 A.D. ar consists of 2 large Pavillions with a open Cowr by and The façade of the hall passesser a Low Roofed Verandah. There is a stage with few steps to reach the Durbar hall. The stage is made of a single granite stone and the same recalls the event of king’s coronation as well the court proceedings thereafter. Adjacent to the eastern wall at the middle of the hall pocists a rectangular wooden stage found erected over the stone base and the same indicates the majesty of conduoting the Durbar activities of the ruler. The roof of this rectangular wooden stage adored with glass in lay workmanship reveals the master craftsmanship of the period. The ceiling of the Central hall is supported by wooden pillars with arched and Voluted fext wres. They have been decorated with stucco figurines and colorful paintings. The top of the 10 plaster pillars found near the wall contain the Dasavodaram (stucco) images. The department has identified the Maharatta paintings over the Nayaka paintings on the northern wall and also spotted a secret passage running northward very near the Durbar stage of this mandapa.

சர்ஜாமாடி
மராட்டியர் கால அரண்மனையான சர்ஜாமாடி “ஏழடுக்கு மாடி“ என்றும் அழைக்கப்படுகிறது. அதில் இரண்டு மராட்டியக் கல்வெட்டுக்கள் இந்தக் கட்டடம் மராத்திய மன்னன் இரண்டாம் சரபோஜி காலத்தில் கி.பி 1823, 1824ல் கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் ஸஜ்யாச மஹால் என அழைக்கப்பட்டு தற்போது சர்ஜாமாடி என மறுவியுள்ளது. சார்ஜா என்பது அழகிய ஜன்னல் என்று மராத்திய மொழியில் பொருள்படும். தரைத்தளத்தில் தூண்கள் கணமாகவும் முதல், இரண்டாம் தளத்தில் சற்றே கணம் குறைந்தும்  மூன்றாம் தளத்திற்கு மரத்தூண்களும் உள்ளன. இவை கட்டடக்கலை நுணுக்கத்ததை வெளிப்படுத்துபவையாகவும் உள்ளது. மேலும் தரைத்தளத்தின் சுவர்ப்பகுதிகளில் சுதை உருவங்களும் தெற்கு வெளிப்புரத்தில் தசவதாரச் சிற்பங்களும் உள்ளன. இவற்றுள் நடராசர் திருக்கல்யாண உருவங்கள் குறிப்பிடத்தக்கன.

SARJA TOWER
          This unique architectural marsel of the mahrtta’s palace complex is also terrned as 7 tirerd tower, the 2 mahratta inscriptions found in the building dated to 1823 and 1824 A.D of saraboji regime refer to its construction though it was named as ‘ sajyasa mahal ‘ later termed to be ‘sarja tower’ which is mahratta means towered building with beautiful lattises. it comprises of 2 storeys found erected over the ground floor. the roof cealing of the ground floor is supported by lofty pillars. while that of the first Second floors contain comparatively ovel pillars. where as the therd floor had only slender wooden pillars. Moreover they exhibit the master craftmanship of the time. The walls of the ground floor adorned with stucco figurines. the external phase of the southern side stone piller contained images of dasavatara concept. Of all the images , the marrige scene, of maharaja deserves special attention and attraction of its execution.

மணிக்கோபுரம்
சதுர அமைப்புடைய இம்மண்டபம் “தொள்ளைக்காது மண்டபம்“ என்றும் “மணிக்கோபுரம்“ என்றும் அழைக்கப்படுகிறது. ஏழு தளங்களைக் கொண்ட இம் மண்டபத்தின் மேல் காலம் காட்டும் கருவி ஒன்று (கடிகாரம்) இருந்தது என்றும் இதில் குரங்கு மணி அடிக்கும் காலம் காட்டும் பொம்மை ஒன்று இருந்தது என்றும் தெரிய வருகிறது. இக்போபுரம் செஞ்சி நாயக்கர் கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளது. தஞ்சை நாயக்கர் மன்னர் விஜயராகவ நாயக்கர் இதன் உச்சியில் நின்று திருவரங்கத்தை நேக்கி வழிபட்டார் என்று செவிவழிச் செய்தி உண்டு.
CLOCK TOWER
          This square shaped partition is commonly terned as thollikkadhu mandabam and manimandabam This 7 tiered pavithon building holds a clock in the top. the clock contained a monkey doll  which used to gory the bell at every hour and another doll pointing to the specification of time .infact this tower recalls the architectural beaty of the bringee nayaks. there is a hear say message that the tanjore nayak vijaya ragava said to offered his daily salutations to lord of sriparyam temple from this building.

ஆயுத கோபுரம்
         
தஞ்சை பெரிய கோயிலைப் போன்று விமான அமைப்புடைய ஆயுத கோபுரம் அரண்மனையின் ஒரு பகுதியாகும். இது 190 அடி உயரமுடைய 7நிலை கொண்டதாக எடுப்பாகக் காட்சியளிக்கின்றது. தஞ்சை மராட்டியர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோபுரத்தில் ஆயுதங்களை சேமித்து வைத்ததால் ஆயுத கோபுரம் என்று பெயர் பெற்றது. ஐரோப்பிய நாடுகளிலிலருந்து வரவழைக்கப்பட்ட ஆயுதங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டன.

ARSANAL TOWER
          This tower resmbiling the style of tanjore temple vimana actually forms part of the palace in 7 tiers of 190 feet  hight this building constructed by the tanjore mahrattas was used for storing arons and ammutions and hence, the name ayudhaoppuram ( Arms tower)come into usage infact arms and ammutions stored in the building were bought from eurpeans countries and hept under safe custody.

நாகநாதசுவாமி கோயில்
முதலாம் இராஜேந்திரசோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் திருக்கையிலாயம் எனும் நாகநாத சுவாமிகோயிலாகும். இங்கு முதலாம் இராஜேந்திரசோழனின் ஆறு கல்வெட்டுக்கள் மற்றும் முதலாம் குலோத்துங்கனின் மூண்று கல்வெட்டுக்களும் இடம்பெற்றுள்ளது. இக்கல்வெட்டொன்றில் இவ்வூர் இழஞ்சிக்குடி வீரநாராயணபுரம் என்று இடம்பெறுகின்றது. முதலாம் இராஜேந்திரசோழனின் காலம் கி.பி 1012 முதல் 1044 வரை, எனவே இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோயில் எனலாம், இங்கு தென்புரம் கோஷ்டத்தில் உள்ள நடராஜர் சிற்பத்தை வணங்குவது போன்ற தோற்றத்தில் இராஜேந்திரசோழனின் சிற்பம் இடம் பெற்றுள்ளது. இது கருவறை, அர்த்தமண்டமம், முன்மண்டபம் என கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு கோஷ்டங்களில் பிச்சாடனார், நடராசர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிக்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, கங்காதரமூர்த்தி சிற்பங்கள் உள்ள.


NaganathaSwamy temple, Manampadi
The temple constructed during the time of Rajendiracola I. it asloknown as Thirukkayilayam wasonfained 6 inscription are Rajendirachola Iresime and 3 inscription of Kulothungachola Ione of the inscription refers this place as Ilanjikudi Vēra Narayanapuram. As Rajendirachola I rule existed between 1012 and 1044 A.D. the date of this temple construction hails 1000 years of  heritage importance. The portrait sculpture of Rajendra chgola I with this queen located on the act of worshipping Lord Natraja ershrined in the niche (Devokosta) On plan the temple east Comprisrs of  a garbagraka (Santurm) ardhamandapa (qvasi-pavithion) and Mukha mandapa(Pacade palillion). The devakostas (nieches) of the temple Contained images of Bikshatana, Nataraja, Vinayaka, Dakshinamoorthy, Lingodbhava, Brahma, Durga, and Gangadhara murthy. The Makara torana are the northeastern nieche Contains the image of all elephant offering puja to (Lord Siva) Sivalingashoded by of  tree and the same trea is identified to be Jamuva tree(Naval maram). On the rear side is shows a famale form and which could be taken for the replication of river Kaviri.


சடையார் கோவில் -திருச்சின்னம் பூண்டி
தஞ்சாவூரில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் திருச்சின்னம் பூண்டி உள்ளது.“திருச்சடைமுடியுடைய மகாதேவர்” என்றும் இவ்வூர் “திருச்சடைமுடி” என்றும் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது. பல்லவ மன்னர்களான மூன்றாம் நந்திவர்மன்(9th century A.D) மற்றும் நிருபதுங்கவர்மனின் காலத்தைச் சார்ந்த இக்கோவில்  முதலாம் பராந்தகன் காலத்தில் கற்றளியாக மாற்றிக் கட்டப்பட்டது. இக்கோவில் பல்லவர் மற்றும் சோழர்களின் கலை மற்றும் கட்டடக்கலைக் கூறுகளைத் தாங்கி நிற்கிறது. கருவறை மற்றும் அர்த்த மண்டபத்துடன் எளிமையாக அமைந்துள்ள இக்கோவிலில் காணப்படும் அழகிய நாட்டிய அணங்குகள், மத்தளக் கலைஞர்கள், நடன மற்றும் இசைக் கலைஞர்கள், இராமாயண நிகழ்சிகளைக் கூறும் சிறு சிறு புடைப்புச் சிற்பங்கள் போற்றத்தக்கனவாகும்
SATAIYAR KOVIL, THIRUCHCHENNAMPOONDI
          This temple was constructed in the early chola architectural style during 9-10th century A.D. An Inscription of Nandivarma Pallava III (9th century A.D) has been engraved on a pillar in the front mandapa of the temple. Several inscription belonging to the period of chola king Paranthaka-I are found here. These inscriptions mention the name of the presiding deity as Thirukadai Mudiudiya Mahadeva and Thiruchadi Mudiydiya Mahadeva.
 மனோரா- சரபேந்திர ராஜப்பட்டினம்
         
மாவீரன் நெப்போலியனுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடந்த போரில் ஆங்கிலேயர் பெற்ற வெற்றியின் நினைவாக மராட்டியமன்னன் இரண்டாம் சரபோஜி கி. பி 1814 ல் “மனோரா” எனும் இந்த நினைவு சின்னத்தைக்கட்டினார்.
Napolean
மனோரா என்பது “மினார்” என்ற சொல்லில் இருந்து வந்தது. எட்டு அடுக்குகளைக்கொண்ட 75 அடி உயரமுள்ள இக்கோபுரம் அறுங்கோண அமைப்புடையது. கோட்டை போலக்காணப்படும் இக்கோபுரத்தைச்சுற்றிலும் மதிலும், அகழியும் காணப்படுகிறன.
Manora- Sarabendra Rajappttinam
Manora Was Build in Commemoration of Victory of The British over Napolean By Thanjavur Maratha King Sarofoji- II In The Year 1814 A.D. The Word “Manora” was Derived From the Word “Minar” This Hexagonal Shaped Eight Storeyed Tower is 75 Feet in Height the Towre, Surrounded by a Rampart Wall and Moat looks like a Port.
 
மீபெரும் நெற்களஞ்சியம் - திருப்பாலைத்துறை
          
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் திருப்பாலைத்துறை என்ற ஊர் அமைந்துள்ளது.இவ்வூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட “பாலைவனநாதர்” கோவிலின் உள்ளே கி.பி.1600-1634 வரை ஆட்சி செய்த அச்சுதப்ப நாயக்கர் அவரது மகன் ரகுநாத நாயக்கன் ஆகியோர் காலத்தில் அவர்களது ஆசிரியர் கோவிந்தப்ப தீட்சிதரால் இக்களஞ்சியம் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.36 அடி உயரமும், 80 அடி சுற்றளவும் கொண்ட இக் கட்டடத்தில் 3000 கலம் நெல்லை சேமித்து வைக்கலாம். முழுவதும் செங்கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த களஞ்சியத்தின் உட்பகுதி கூம்பு போன்ற அமைப்பில் காணப்படுகிறது.
GRANARY- TIRUPALAITHURAI
Granary of Palaivananathar Swamy temple, at Papanasam  was constructed during the Nayak period by the Thanjavur Nayak King Ragunatha (CE 1600-1634). This 36 feet height granary is circular in shape at the bottom and conical at the top. It has three openings one is at the lower end, second at the center and the third at the top. Approximately 3000 kalams of grain can be stored in this granary.


மேற்கண்ட இடங்களை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்து தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
All place was declared protected and preserved as a Monument of Tamilnadu Government State Department of Archaeology (TNSDA)

Comments

Popular posts from this blog

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொண்ட அகழாய்வு

சுண்ணாம்புக் காரை அரைக்கும் கல் சக்கரம்

கல்வெட்டு ஆராய்ச்சிக்கு படிப்பு