தஞ்சை நாயக்கர் காலத்தில் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி
டேனிஷ்
கோட்டை
1620ஆம்
ஆண்டு நவம்பர் 19ஆம் நாளில் டென்மார்க் அரசர் கிருஸ்டியன் IVக்கும் இரகுநாத நாயக்கருக்கும்
ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடியில் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி வணிக மையத்தை
அமைத்துக்கொள்ள இரகுநாத நாயக்கர் அனுமதியளித்தார். இவ்வொப்பந்தத்தில் இரகுநாத நாயக்கரே
தெலுங்கில் கையொப்பமிட்டுள்ளார். வரலாற்றுச் சிறப்புபிக்க இவ்ஆவணம் கோபன்ஹேகனில் உள்ள
ராயல் ஆவணக்காப்பகத்தில் உள்ளது.
பொன்னோலை
ரௌத்ரி வருடம் சித்திரை மாதம் 20 ஆம் நாளில் எழுதப்பட்ட
தங்க ஓலையானது தற்போது கோபன்ஹேகனில் உள்ள ராயல் ஆவணக்காப்பகத்தில் உள்ளது. தமிழில்
எழுதி தெலுங்கில் கையொப்பமிடப்பட்ட இப்பொன்னோலை டென்மார்க் அரசர் கிருஸ்டியன் IV என்பவருக்கு
நட்புறவுடன் எழுதப்பட்டதாகும்.
Comments
Post a Comment