தஞ்சாவூர் மாவட்டத்தில் தொல்லியல் சான்றுகள்


தஞ்சாவூர் மாவட்டத்தில் தொல்லியல் சான்றுகள்
பழையகற்காலம்
இராபர்ட் புரூஸ்புட் அவர்கள் தமிழகத்தில் பல இடங்களில் கற்காலக் கருவிகளைக் கண்டுபிடித்தார், அவர் தஞ்சாவூர் பகுதியில் வங்கானங்குடிகாடு எனும் இடத்தில் கற்காலக் கருவி கிடைத்ததாகக் குறிப்பிடுகின்றார். தற்போது மேற்கொண்ட ஆய்வுகளில் தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பல இடங்களில் குறைந்த தரமுள்ள செர்ட்டி குவார்ட்சைட் கற்களால் செய்யப்பட்ட பழங்கற்காலக் கருவிகள் கிடைக்கின்றன, இவை பழங்கற்கால மக்கள் பரவலாக இப்பகுதியில் வாழ்ந்ததை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன
புனல்குளத்தில் கிடைத்த கருவி
பழையகற்காலம்
1
புனல்குளம் (மகாராஜசமுத்திர வட கரையில்)
தஞ்சாவூர்/புதுக்கோட்டை
பழையகற்காலக் கருவிகள்
2
மனோஜிபட்டி
தஞ்சாவூர்
பழையகற்காலக் கருவிகள், தொழிற்கூடம்
3
பிள்ளையார்பட்டி
தஞ்சாவூர்
பழையகற்காலக் கருவிகள்
4
திருக்கானூர்பட்டி
தஞ்சாவூர்
பழையகற்காலக் கருவிகள்
                                                                                                        


இடைக்கற்காலம்
தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பல இடங்களில் குறைந்த தரமுள்ள குவார்ட்சைட் கற்களால் செய்யப்பட்ட நுண்கற்கருவிகள் கிடைகின்றன, இவை நுண்கற்கருவிகள் பயன்படுத்திய இடைக்கற்கால மக்கள் இப்பகுதியில் வாழ்ந்ததை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
இடைக்கற்காலம்
1
புனல்குளம் (மகாராஜசமுத்திர வட கரையில்)
தஞ்சாவூர்/ புதுக்கோட்டை
நுண்கற்கருவிகள்
2
மனோஜிபட்டி
தஞ்சாவூர்
நுண்கற்கருவிகள்
3
பிள்ளையார்பட்டி
தஞ்சாவூர்
நுண்கற்கருவிகள்
4
திருக்கானூர்பட்டி
தஞ்சாவூர்
நுண்கற்கருவிகள்



புதிய கற்காலம்
புதிய கற்கால மக்கள் வேளாண்மை செய்யக் கற்றுக் கொண்டு ஓரிடத்தில் நிலையாக வாழ்ந்த காலம். தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் டோலரைட் கற்களைக் கொண்டு நன்கு வழவழப்பாக மெருகேற்றி செய்யப்பட்ட உடைந்த புதிய கற்காலக் கருவி ஒன்று கிடைத்துள்ளது.
புதிய கற்காலம்

1
பிள்ளையார்பட்டி
தஞ்சாவூர்
புதிய கற்காலக் கருவிகள்




பெருங்கற்காலம்
பெருங்கற்களை கொண்டு ஈமச்சின்னங்களை அமைத்து மக்கள் வாழ்ந்த காலம் பெருங்கற்காலம் என வரையறுக்கப்படுகிறது. இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் பெரிய கற்களைக்கொண்டு எடுக்கப்பட்ட ஈமச் சின்னங்களை பெருங்கற்காலச் சின்னங்கள் என கூறுகிறோம், இவர்கள் இரும்பை அதிகமாக பயன்படுத்தியதால் இது இரும்புக்காலம் எனவும் அழைக்கப்படுகிறது. பொதுவாகத் தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பகுதியில் கற்கள் அதிகமாக கிடைக்காததால் கற்களைப் பயன்படுத்தாமல் பல இடங்களில் நிலத்திற்கு கீழே தாழிகளில் மட்டும் வைத்துப் புதைத்துள்ளனர்.
 
பெருங்கற்காலம்
1
வல்லம்
தஞ்சாவூர்
முதுமக்கள் தாழி

வல்லம் புதூர்
தஞ்சாவூர்
முதுமக்கள் தாழி
2
பிள்ளையார்பட்டி
தஞ்சாவூர்
முதுமக்கள் தாழி
3
மனோஜிபட்டி
தஞ்சாவூர்
முதுமக்கள் தாழி
4
மாப்பிள்ளைநாயக்கன்பட்டி
தஞ்சாவூர்
முதுமக்கள் தாழி
5
திட்டை
தஞ்சாவூர்
முதுமக்கள் தாழி
6
கோவிந்தங்குடி
தஞ்சாவூர்
முதுமக்கள் தாழி
7
பாளையப்பட்டி
தஞ்சாவூர்
முதுமக்கள் தாழி




Comments

Popular posts from this blog

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொண்ட அகழாய்வு

சுண்ணாம்புக் காரை அரைக்கும் கல் சக்கரம்

கல்வெட்டு ஆராய்ச்சிக்கு படிப்பு