வல்லம் கோட்டை
வல்லம் கோட்டை
காவேரி ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள இவ்வூரின்
கிழக்கில் அழிந்த நிலையிலுள்ள கோட்டைப் பகுதியும், மேடான பகுதியும் காணப் படுகின்றன.
சங்க இலக்கியங்களில் அகநானூற்றில் சோழர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக விளங்கியதையும்,
இங்கிருந்த பாதுகாப்பு அரணையும் பாவைக்கொட்டிலார் எனும் புலவர் குறிப்பிடுகிறார். சோழர்களின்
வழிவந்த நல்லடி என்பவர் இவ்வூரின் தலைவராக இருந்ததை பரணர் என்னும் புலவர் குறிப்பிடுகிறார்.
முத்தரையர்கள் இப்பகுதியை ஆண்டிருந்ததை செந்தலைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது எட்டாம்
நூற்றாண்டில் வல்லம் அவர்களின் தலைநகரகாகவும் விளங்கியது. விஜயாலயசோழன் தஞ்சாவூரைக்
கைப்பற்றியதும் இவ்வூர் சோழர்களின் கருவூலமாகவும், படைவீடாகவும் செயல்பட்டது. தஞ்சை
மராட்டியர்களின் காலத்தில் வல்லம் அவர்களின் பாதுகாப்பு அரணாக விளங்கியது. வல்லம் கோட்டையை
ஆங்கிலேயர்களின் படைத்தளபதி ’’ஸ்மித்’ கைப்பற்றி அப்போதைய தஞ்சை ஆட்சித் தலைவர்களின்
வசிப்பிடமாக இக்கோட்டை அமைக்கப்பட்டது.
இதனை
சிறப்பு மிக்க வல்லம் நகரை தமிழ்ப் பல்கலைக் கழக கல்வெட்டியல் துறை 1984 மற்றும் 2013ஆம்
ஆண்டில் அகழாய்வுகள் செய்துள்ளது. இதில் கி. மு. 3முதல் கி.பி.16ஆம் நூற்றாண்டு வரையான
வரலாற்றுக் கால சான்றுகள் கிடைதுள்ளன.
Comments
Post a Comment