Posts

Showing posts from May, 2018

தொல்லியல் படிக்க இந்திய அளவில் உள்ள கல்வி நிறுவனங்கள்

Image
மனிதர்கள் வாழ்ந்த வாழ்கை முறை,   நாகரிகம், அவர்கள் விட்டுச்சென்ற பொருட்கள், நினைவுச்சின்னங்கள், கல்வெட்டு எழுத்துக்கள், நில அமைப்புகளை ஆராய்ந்து படிக்கும் துறையே தொல்லியல்துறை. தொல்லியல் (Archaeology) எனும் சொல் கிரேக்க மொழியைச் சேர்ந்தது. “ஆர்க்கியாஸ்” என்றால் பழங்காலப்பொருட்கள் என்றும், “லோக்கோஸ்” என்றால் அறிவியல் என்று பொருள். பழங்காலப் பொருட்களை அறிவியல் ரீதியாக ஆய்வுசெய்து படிப்பதே இந்தப்படிப்பாகும். Sir Alexander Cunningham: Father of Indian Archeology இந்தியத் தொல்லியல்   ஆய்வகம், இந்தியாவின் கலை சார்ந்த பாரம்பரியங்களை பாதுகாப்பதற்காக, இந்திய தொல்லியல் ஆய்வகம் என்னும் அமைப்பானது, 1862 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த ஜெனரல் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம், இந்த அமைப்பிற்கு முதல் இயக்குநராக இருந்தார். இந்தியாவில் தொல்லியலைப்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய இவர், இந்திய தொல்லியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். தற்போது இந்த தொல்லியல் ஆராய்ச்சிக்காக இந்திய அளவில் 24 வட்டங்களாகப்பிரித்து செயல்பட்டு வருகிறது. தொல்லியல் ஆய்வாளர் (Archaeologist) என்பவ