தொல்லியல் படிக்க இந்திய அளவில் உள்ள கல்வி நிறுவனங்கள்
மனிதர்கள் வாழ்ந்த வாழ்கை முறை, நாகரிகம், அவர்கள் விட்டுச்சென்ற பொருட்கள், நினைவுச்சின்னங்கள்,
கல்வெட்டு எழுத்துக்கள், நில அமைப்புகளை ஆராய்ந்து படிக்கும் துறையே தொல்லியல்துறை.
தொல்லியல் (Archaeology) எனும் சொல் கிரேக்க மொழியைச் சேர்ந்தது.
“ஆர்க்கியாஸ்” என்றால் பழங்காலப்பொருட்கள் என்றும், “லோக்கோஸ்” என்றால் அறிவியல் என்று
பொருள். பழங்காலப் பொருட்களை அறிவியல் ரீதியாக ஆய்வுசெய்து படிப்பதே இந்தப்படிப்பாகும்.
Sir Alexander Cunningham: Father of Indian Archeology |
தொல்லியல் ஆய்வாளர் (Archaeologist) என்பவர்கள் தொல்லியல் சார்ந்த கண்டு பிடிப்புகளில் ஈடுபடுபவர்கள்
இவர்களையே தொல்லியல் ஆய்வாளர்கள் என, அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு முதன்மையானது
களாய்வு தொல்லியல் சார்ந்த இடங்களை இலக்கியங்கள், கல்வெட்டுகள் ஆதாரங்ளாகக் கொண்டு
அந்தந்த இடங்களுக்கே நேரடியாகச் சென்று ஆய்வுமேற்கொன்டு அறிக்கை அனுப்புவது.
பணிகள்:
நமது தொன்மையை
விளக்கும் பழங்கால கட்டடங்களையும் நினைவுச்சின்னங்களையும் கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்களை
பாதுகாப்பது, பராமறிப்பது தொல்லியல் துறையின் முதன்மைப்பனிகளாகும்.
கல்வி நிறுவனங்கள்:
இந்திய தொல்லியல் ஆய்வகம், புதுடில்லி.
அலகாபாத் பல்கலைக்கழகம், அலகாபாத்.
ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம்.
பெங்களூரு பல்கலைக்கழகம், பெங்களூரு.
பனாரஸ் பல்கலைக்கழகம், வாரணாசி.
சென்னை பல்கலைக்கழகம், சென்னை.
கோல்கட்டா பல்கலைக்கழகம், கோல்கட்டா.
மைசூரு பழ்கலைக்கழகம், சாகர்ஜீனா நகர்.
மகாராஜா சாயாஜிராவ்
பல்கலைக்கழகம், பரோடா.
குஜராத் பல்கலைக்கழகம், அகமதாபாத்.
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
தகுதிகள்:
டிப்ளமா
/ இயநிலை பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் படிப்பிற்கு
·
+2 தகுதி
போதுமானது.
முதுநிலை / டிப்ளமா முதுநிலை பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் / கல்வெட்டியல்
மற்றும் தொல்லியல் படிப்பிற்கு இளநிலை
படிப்பில், 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
வேலை வாய்ப்புகள்:
இந்த தொல்லியல்
படிப்பினை வெற்றிகரமாக முடித்தவர்ளுக்கு மத்திய மானில தொல்லியல் துறைகளில், வெளிநாடு
மற்றும் உள்நாடுகளளில் நல்ல வரவேற்பு உள்ளது மேலும் ஆய்வக ஆய்வாளராகவும் கல்லூரி ஆசிரியராகவும்
பணிபுரியலாம்.
Comments
Post a Comment