Posts

Showing posts from July, 2019

ஸ்ரீ செங்கழுநீர் பிள்ளையார் கோயில் சிதம்பரம்

Image
        ஸ்ரீ செங்கழுநீர் பிள்ளையார் கோயில் கடலூர் மாவட்டம் , சிதம்பரம் நகராட்சியில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தென்கிழக்கில் 3 ஆம் வீதியில் செங்கழுநீர் பிள்ளையார் கோயில் தெருவில் ( செ . பி . கோயில் தெரு ) M- 116 ( Major District Road ) யினை ஒட்டி அருள்மிகு ஸ்ரீ செங்கழுநீர் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது . கோயில் அமைந்துள்ள இடத்திலிருந்து தெற்கே செங்கழுநீர் வாய்க்காளானது ஓடிக்கொண்டிருக்கிறது . இது ஆயிக்குளம் நிறைந்து வெளிவரும் நீரானது கிழக்கில் ஓடி கா ன்சாகிப்பு ஓடையில் இணைந்து வங்கக்கடலில் கலக்கிறது . இந்த ஓடையினை ஒட்டி அமைந்திருந்த காரணத்தினாலயே இக்கோயில் செங்கழுநீர் பிள்ளையார் கோயில் என அழைக்கப்படுகின்றது . கட்டடக்கலை :           இதன் கட்டடக்கலையானது கருவறை , அர்த்தமண்டபம் , முன்மண்டபம் என உள்ளது . முன்மண்டபமானது முழுவதும் பிற்கலத்தில் எடுக்கப்பட்டுள்ளது . அதிட்டானம் , பாதம் வரையில் கல் வேலைப்பாடுகள் தெரிகின்றது . ஏனையப்பகுதிகளான பிரஸ்தரம் , கிரீவம் , சிகரம் , ஸ்தூபி தற்போது செங்கல் கட்டுமானங்களாகத் தெரிகின்றது . உடைந்த கொடுங்கைப்பகுதிகள் அங்கேயே கிடக்கின்றத