Posts

Showing posts from September, 2019

சுண்ணாம்புக் காரை அரைக்கும் கல் சக்கரம்

Image
சுண்ணாம்புக் காரை அரைக்கும் கல் சக்கரம் தர்பார்மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுண்ணாம்புக்காரை அரைக்கும் கருங்கல் சக்கரம் இயற்கையில் கிடைத்த சுக்கான் பாறைகள், சுக்கான் கற்களை சுட்டு அதனை சுண்ணாம்புக் காரைகளாக (lime mortar) தயாரிக்க கருங்கல் செக்குகள் பயன்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் கருங்கல் கட்டடங்களுக்கு முன்னா் செங்கல்லால் கட்டப்பட்ட கட்டடங்கள் இருந்துள்ளன. ஏழாம் நூற்றாண்டு கருங்கல் கட்டடங்கள் அதற்கு முன் இருந்த செங்கல் கட்டடங்களின் மாதிரிகள் தான் என்பதில் ஐயமில்லை. கருங்கல் சுவருக்கு அதன் மேல் சுண்ணாம்புக் காரையால் பூசவேண்டிய தேவை இல்லை. ஆனால் செங்கல் சுவர்களுக்கு சுண்ணாம்புக் காரையால் பூசுவது இன்றியமையாதது.             சுண்ணாம்புடன் மணல்கலந்து அதனைக் கருங்கல் சக்கரத்தில் அரைப்பர். 50 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட நடைமுறையில் இருந்துவந்த இந்த முறை சிமெண்டின் (cement) வருகையால் தற்போது வழக்கொழிந்துவிட்டது. அரைத்த சுண்ணாம்புக்காரை சிலநாட்கள் புளிக்கவைத்து பின்னரே பயன்படுத்தப்படும். காளை பூட்டியும் மனிதர்களைக் கொண்டும் வட்டமாகச்சுற்றி சுண்ணாம்புக்காரை அரைக்கப்படும். இவ்