Posts

Showing posts from April, 2021

கார்பன் டேட்டிங்க் என்றால் என்ன ?

Image
 கனகவல்லி என்ற பள்ளி மாணவி அவள் குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் மிட்டாய் கொடுத்தாள். அனைவரும் மிட்டாய் எடுத்துக் கொண்டு “ உனக்கு பிறந்தநாளா” என்று கேட்டார்கள். “இல்லை ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களை கார்பன் டேட்டிங் முறையில் சோதித்ததில் தமிழர் நாகரீகம் 3000 ம் ஆண்டு பழமையானது என்று நிருபிக்கப்பட்டுள்ளது ” என்றாள். இதைக் கேட்டு அனைவரும் அவளுக்கு வாழ்த்து சொன்னார்கள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கனகவல்லியின் அம்மா உனக்கு இது தேவையில்லாத வேலை” என்று எச்சரித்தார். “அம்மா நாம் யாரையாவது எந்த கலாச்சாரத்தையாவது குறை சொன்னோமா. நம் கலாச்சாரத்துக்கு ஒரு அறிவியல் அடிப்படை ஆதாரம் கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியை தெரிவிக்கிறோம் அவ்வளவுதானே” என்று பதில் சொல்லிவிட்டாள்.   இப்படி அனைவருக்கும் மிட்டாய் கொடுத்து வரும் போது அவளுக்கு பிடித்த ரிச்சா ஆண்டிக்கும் மிட்டாய் கொடுத்தாள். ரிச்சா ஆண்டி செய்தியைக் கேட்டு பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தெரிவித்து விட்டு கனகவல்லியிடம் “சரிப்பா Carbon dating carbon dating என்று சொன்னாயே கார்பன் டேட்டிங்க் என்றால் என்ன? “ “சத்தியமா எனக்கு த

சிறுகதை- ஆசிரியர்: பா. ச. பாலசிங்

Image
அனைவரும் பாண்டியப் பேரரசு என்றால் என்ன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். சிறிய புத்தகமாக இருந்தாலும் உள்ளிருக்கும் கருத்துக்கள் ஆழமானவை. Short and sweet என்று சொல்லலாம். ஆசிரியர் பா. ச. பாலசிங் அருமையாக எழுதியுள்ளார்.     கதையில் வருபவர்கள் பாண்டி செல்வம், தங்கை உமையம்மாள், தந்தை முத்துமாலை, தாய் இராஜேஸ்வரி ,நண்பன் குமார், ஸ்னோலின் கணக்கு மிஸ் மற்றும் அண்ணாத்துரை. பாண்டி செல்வம் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தான். அவன் தங்கையும் அதே பள்ளியில் முதல் வகுப்பு படித்து கொண்டிருந்தாள். தந்தை மளிகைக் கடை வைத்திருந்தார். பள்ளி முடிந்ததும் இருவரும் கடைக்கு வந்து விளையாடி கொண்டிருப்பார்கள், இரவு எட்டு மணிக்கு கடை அடைத்துவிட்டு எல்லோரும் வீடு திரும்புவார்கள். இரவில் பாண்டி செல்வம் மற்றும் தங்கை தனது தந்தையுடன் கதை கேட்டுவிட்டு தயங்குவார்கள். அன்று பாண்டி கேட்ட கதை, "பாண்டியப் பேரரசு". தந்தை சொன்னார் இந்த கதையை இரகசியமாக வைத்துக்கொள் யாரிடமும் சொல்ல கூடாது என்றார். ஏன் என்று கேட்டான், இது உண்மை கதை அதனால் வெளியில் யாருக்கும் சொல்லாதே என்றார். நமக்