Posts

Showing posts from 2019

தொல்லியல் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு.

Image
 தொல்லியல் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு . சென்னை:தொல்லியல் பயிற்சி பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசின், தொல்லியல் துறை, 'தொல்லியல் ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில், சென்னை, தர்மபுரி, கோவை, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலியில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், தலா, ஐந்து நாட்கள், பயிற்சி பட்டறை நடத்த திட்டமிட்டுள்ளது.இப்பயிற்சியில், தொல்லியல், அகழாய்வு, கல்வெட்டு, நாணயவியல், வரலாற்று சின்னங்கள் புனரமைப்பு, ஆவணப்படுத்துதல், நவீன தொழில்நுட்பங்களை கையாளுதல் போன்ற தலைப்புகளில், தொல்லியல் அறிஞர்கள் பயிற்சி அளிப்பர்; கள ஆய்வு பயிற்சியும் அளிக்கப்படும். விருப்பம் உள்ள, தொல்லியல் ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தங்கள் பெயர், முகவரி, கல்வித் தகுதி ஆகிய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை, 'கமிஷனர், தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை - 8' என்ற முகவரிக்கு, தபாலில் அனுப்பவும். அல்லது tnsdaworkshopgmail.com

கீழடி தொல்லியல் செய்திகள்

Image
கீழட  அகழாய்வு கூலி தொழிலாளர்கள் "ஒளி நிழல் நடுவில் நாங்கள்" ஆவணப்படம் திரையிடல் தமிழக அரசு மதுரையில இப்படி பண்ணுவாங்கன்னு யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க ,அப்படி என்ன செஞ்சாங்கனு நீங்களே பாருங்க... https://m.facebook.com/story.php?story_fbid=1540986562770696&id=435650216637675   கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் உலக தமிழ் சங்கத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டி (மெய் நிகர் காட்சியாக) 360° கோணத்தில் பார்க்கலாம் . கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் மதுரை தமிழ்ச்சங்க வாளகத்தில் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 6ம் கட்ட அகழாய்வு கீழடி தினமலர் 19.10.2019 ஐத்தாம் கட்ட அகழாய்வு முடிவுற்றது. https://tamil.news18.com/news/tamil-nadu/keeladi-draws-more-attention-as-5th-phase-is-about-to-end-yuv-215693.html மத்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் கீழடி அகழாய்விற்க்கு 15 ஆண்டுகள் தேவை   கீழடி அகழாய்வு 5ஆம் கட்டம்  அகழாய்வு நிறைவுக்கு முன்பு ஒரு விரிவான பாய

பிறமாவட்ட தொல்லியல் செய்திகள்

Image
கலசபக்கம் சுற்றுவட்டார பகுதியில் புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு 31.05.2022 தமிழகத்தில் 3500 ஆண்டுகள் தொன்மையான எஃகு வாள் மதுரை அருகே தே. கள்ளுப்பட்டயில் பழமை பேசும் தேவன் குறிச்சி மலை மதுரை 23.10.2010 திண்டுக்கல் அருகே கல்வட்டம் கண்டுபிடிப்பு. போடி 18.10.2019  அரவக்குறிச்சி அருகே கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு தினமணி 16.10.2019 சேலத்தில் கிடைத்த முதுமக்கள் தாழி   15.10.2019 தர்மபுரி பென்னாகரம் அருகே 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கள்வட்டம் கண்டுபிடிப்பு.  09.10.2019 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சசூரன்விடுதியில் மாடு உரசும் கல் கண்டுபிடிப்பு.   இந்து தமிழ் திசை 11.10.2019 ப-5 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 3500 ஆண்டுகள் பழமையான கற்கோடரி கண்டுபிடிப்பு.    கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வினை போன்று அம்பலத்திடலில் நடத்தப்பட வேண்டும் சாமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை புதுகை வரலாறு 10.10.2019 ப-5 பகவதி மலையில் தமிழி கல்வெட்டு கண்டுபிடிப்பு 06.10.2019 திருக்கோவிலூர் அருக

தஞ்சாவூர் மாவட்ட தொல்லியல் செய்திகள்

Image
ஒரத்தநாடு முத்தாம்பாள் சத்திரம் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்படும்     தஞ்சை அரண்மனை கட்டப்பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்பு அரைக்கும் கருங்கல் சக்கரம் காவிரியின் நீரோட்டம் கோடையிலும் இருந்ததை அறிய முடிகிறது .   02.09.2019 தினமணி ப-4 தஞ்சை மராட்டியர் மன்னர்கள் சமாதி தஞ்சாவூர் மாவட்டம் உடையாளூரில் உள்ளது மாமன்னன் இராஜராஜ சோழன் சமாதியா தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆய்வு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு முத்தாம்பாள் சத்திரம்  அழிந்து வரும் கலைச்சின்னம் எனும் செய்தி   அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் புகைப்பட கண்காட்சி தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு போலீசார்  பந்தனல்லூர் சிலைகள் மாறியது தொடர்பாகவும் ஆய்வு

ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம்

Image
ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் ஒரத்தநாடு தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ளது. இங்கு ஆய்வுசெய்யப்பட்ட முத்தம்மாள் சத்திரம் 10 ° 37’ 40.2” வடக்கு அட்சரேகையிலும் , 79 ° 15 ′ 07.5 ″ கிழக்கு தீர்க்கரேகையிலும் அமைந்து ள்ளது . இவ்விடம் தஞ்சாவூரிலிருந்து உளூர் வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் 35 கி.மீ தொலைவில் உள்ளது . காவிரியின் தென்கரையில் உள்ள இவ்வூர் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஊராக மராட்டியர் ஆட்சி காலத்தில் தலைத்தோங்கி இருந்தது. ஒரத்தநாடு நகர அமைப்பானது 18, 19 ஆம் நூற்றாண்டில் திட்டமிட்டு கட்டப்பட்டது இதில் இன்றும் இந் நகரத் தெருக்கள் ஒன்றோடு ஒன்று வெட்டிச்செல்வதைக் காணமுடிகிறது. இங்கு காசி விசாலாட்சி, உடனுறை காசிவிஸ்வநாதர் ஆலயம், முத்தம்மாள் சத்திரம், அன்னச்சத்திரம், சவுக்கண்டி, வீரஆஞ்சநேயர் கோயில் மற்றும் தேர் முட்டிகள் என வரலாற்று எச்சங்கள் உள்ளன.   தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய அரசர்கள் 1743 முதல் 1837 வரை பெரிய, சிறிய சத்திரங்களை தஞ்சாவூர் முதல் தனுஷ்கோடி வரை அமைத்தனர். இவற்றில் தஞ்சாவூர் - காஞ்சி வீடு சத்திரம், சிரேயஸ் சத்திரம், சூரக்கோட்டை-