Posts

Showing posts from March, 2018

கல்வெட்டு ஆராய்ச்சிக்கு படிப்பு

Image
வரலாற்று தகவல்களையும் தொன்மையையும் படித்து அறிந்து கொள்வது என்பது ஒரு சுவாரசியமான அனுபவம். அ வை அரிய புத்தகங்களோடு நின்று விடாமல் முதன்மைச் சான்றுகளாகத் திகழும் கல்வெட்டுகள்,   தொல் பொருட்கள் கிடைக்கும் பகுதிக்கு நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்வது சுவாரசியத்தை அதிகரிக்கும். அவ்வாறே கல்வெட்டு (எழுத்து)ஆராய்ச்சியானது பாறைகள், கோவில் சுவர்கள், தூண்கள், செப்பேடுகள், ஓலைச்சுடிகள், தாள் ஆவணங்கள் போன்றவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள எழுத்துகளையும், ஓவியங்களையும், குறியீடுகளையும் ஆய்வு செய்வது ஆகும். கல்வெட்டு ஆராய்ச்சிக்கு ஒரு படிப்பு : தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் இயங்கி வரும் கல்வெட்டு ஆராய்ச்சி நிறுவனம் (Institute of   Epigraphy) கல்வெட்டு, தொல்லியல், அகழாய்வில் முதுகலை டிப்ளமா படிப்பை (Post Graduate Diploma in Epigraphy, Archaeology, Excavation) வழங்கி வருகிறது. பாரம்பரியமிக்க இக்கல்வி நிறுவனம் சென்னை எழும்பூரில் (குழந்தைகள் அரசு மருத்துவமனை அருகில்) தமிழ் வளர்ச்சி வளாகத்தில் இயங்கி வருகிறது. ஓராண்டு காலம் கொண்ட இந்தக் கல்வெட்டு ஆராய்ச்சி டிப்ளமோ படிப்பு

சூலக்கல் கல்வெட்டு -1

Image
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வடகாடு கிராமம் பிலாக்கொள்ளை  எனும் இடத்தில் நடப்பட்ட கி.பி. 19 ஆம் நூற்றாண்டு சூலக்கல்.       மாங்காட்டில்  தற்போது உள்ள பிரளைய விடங்கன் எனும் சிவன் கோயிலுக்கு வடகாட்டில் சந்தையில் ஆயம் வர வரி வசூழ்செய்து சாமானியன் தர்மம் கொடுத்ததாகக் (சந்தைக்கு விற்பனைக்கு வரும் வியாபாரிகளிடம் இருந்து வரி வஸ்சூல் செய்து கோவிலுக்கு தானம் கொடுக்கப்பட்டதாக) குறிப்பிடுகின்றது இந்தக்கல்.     *கல் நடப்பட்ட இடம் ஒரு காலத்தில் சந்தையாக இருந்தது குறிப்பிடத் தக்கது.  1. பிர 1a. ளை 1b. ய 2.விடங் 2a. கற்கு 3. வ ட காட்டி 4. ல் சந்தயி 5. லாயம் வ 6. ரசமானிய 7. ர்தன்ம 8. ம்.

அறந்தாங்கி ஆண்டாகோட்டைக் கல்வெட்டு

Image
அறந்தாங்கி ஆண்டாகோட்டைக் கல்வெட்டு           புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆண்டாகோட்டைக்கு முன்பாக உள்ள மருதங்குளத்துக்கரையில் மருதம்மாகோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு முன்பாக சாலையின் ஓரம் ஒரு கல் நடப்பட்டுள்ளது. இதில் 17 வரிகளைக் கொண்ட தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.  1.பிறபவ ²  சித்தி 2.ரை ± 2 ° நரசா 3. நாயக்கத் தொண் 4.டைமானார் புத்தி 5.ரன் இரங்கல் மீட் 6. ட பெருமாள் தன் 7.மஆக திருவம்பல 8.வன் எ[ன்ற] பேரா 9.லே இறையி[லி]த் தன் 10.மஆக வெட்டினே ந் 11.இந்த தன்மத்திலே இ 12.றைத்தவன் கெங்கை 13.கரையில் காராம் 13.பசுவையும் பிரா 14.மணனையும் மாதா 15.பிதாவையும் கொன் 16.ற பாவத்திலே போக 17.கடவானாகவும்°            இந்த கல்வெட்டில் திவம்பலவன் எனும் பெயரால் வரிச்சலுகை இறையிலியாக தானம் செய்த செய்தி இடம் பெற்றுள்ளது. இங்குள்ள கோயிலைச் சிலர் வழிபட்டு வருவதாகவும், ஒரு பெண் இறந்ததின் காரணமாக இக்கோவில் கட்டப்பட்டதாகவும் வழிபட்டு வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.

குமிழிமடை கல்வெட்டு-1

Image
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கீரமங்கலத்தை அடுத்த சேந்தன்குடி பெரியாத்தாள் ஊருணியில் உள்ள 1808 ஆம் ஆண்டைச் சோ்ந்த குமிழி மடை கல்வெட்டு .     புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் புதுக்கோட்டை சமஸ்தானத்தால் படித்து பதிப்பித்து வெளிவந்துள்ளது.  அதில் 200 க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் நீா்ப்பாசனம் தொடா்பான கல்வெட்டுகளாக இடம் பெற்றுள்ளன.  இதுவரை 30க்கும் மேற்பட்ட குமிழி மடைகளில் நீா்ப்பாசனம், மடை, மற்றும் விளைநிலங்கள் தொடா்பான கல்வெட்டுகள் நமக்குக்கிடைக்கின்றன.      பொதுவாக மழைக்காலங்களில் நீா் பெருக்கெடுத்து ஓடி வெயில் காலத்தில் வறண்டு காணப்படும் ஆறுகள் மட்டுமே இம் மாவட்டத்தில் உள்ளன.  எனினும் அதிகப்படியான குளங்கள், ஏரிகள் மற்றும் கண்மாய்களும் கொண்ட இந்த மாவட்டத்தில் சங்கிலித் தொடராய் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கடலில் கலக்கும் வகையில் அமையப்பெற்றுள்ளது.       இந்த நீா்நிலைகளை சுற்றியுள்ள விளை நிலங்களுக்கும் குமிழி மடையின் மூலமாக பாசண நீா் வெளிச்செல்ல அமைக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம். பொதுவாக நீா்ப்பாசணம் தொடா்புடைய கல்வெட்டுகளில் நீா் நிலைக