Posts

Showing posts from July, 2018

மங்களநாடு அருகே சங்ககால ஈமக்காடு மற்றும் வாழ்விடப்பகுதி

Image
அம்பலத்திடல் : சுப்பிரமணியபுரத்திலிருந்து வடக்கே 6 கி.மீ. தொலைவில் வில்லூனி ஆற்றின் தென்கரையில் அம்பலத்திடல் அமைந்துள்ள. இந்த இடத்தை ஊர் மக்கள் மணமேடு என்று அழைக்கின்றனர். இவிடத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் பரந்த மணல்மேடு காணப்படுகின்றது. இங்கு ஈமக்காடானது 90% மங்களநட்டு பஞ்சாயத்திலும் 10% ராமசாமி பஞ்சாயத்திலுல் அமைந்துள்ளது. இங்கு கருப்பு, கருப்பு சிவப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள்(Red sliped ware & brown slipped ware) சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. வயிற்றுப்பகுதி வரை சிதைந்த பானைகளும், தரைக்கு மேற்பரப்பில் வாட்டவட்டமாக காணப்படுகின்றது. இதில் சிலவற்றில் குறியீடுகள் கீறல்களாகக் காணப்படுகின்றது. இது பொதுவாக பானையின் களழுத்துப்பகுதிக்கு கீழேயும் பானையின் வெளிப்புறத்திலேயும் அதிகமாக காணப்படுகிறது. குறியீடு பொறித்த பானையோடு இதனுடன் மண்ணால் செய்யப்பட்ட சுடுமண் பாசிமணியும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடம் சித்த மருத்துவர் திரு மதியழகன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு இதன் சிறப்பானது நாளிதழ்களில் வெளிவந்துள்ளது. 03.10.2014இல் வெளிவந்த தினமலர், திருச்சி வெளியீடு, 04.10.2004இல் வ

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நினைவுச் சின்னங்களை விருச்சுவல் ரியாலிட்டியில் (Virtual Reality) காணலாம்

Image
வெட்டுவான் கோவில்- கழுகுமலை VettuvanKoil - Kazhugumalai - Madras MindWorks http://madrasmindworks.com/vrview/archaeology/page1/ வெட்டுவான் கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் சங்கரன் கோவிலிலிருந்து 19கி.மீ. தொலைவில் கழகுமலை என்ற ஊரில் உள்ளது. இவ்வூரிலிருந்து வடக்காக உள்ள மலையில் வெட்டுவான் கோவிலும் அதன் அருகில் சமண தீர்த்தங்ககரர்கள் உருவங்களும் உள்ளன. கழுகுமலை எனும் பெயரானது நின்றசீர் நெடுமாறன் காலத்தில் சமணர்கள் இவிடத்தில் கழுவேற்றிய காரணத்தால் உருவானது. ஸ்வஸ்திக் கிணறு- திருவெள்ளறை Swasthika Well - Thiruvelarai - Madras MindWorks http://madrasmindworks.com/vrview/archaeology/page2/ திறுவெள்ளறை திருச்சியிலிருந்து 15கி.மீ தொலைவில் லால்குடி வட்டத்தில் உள்ளது. பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் கி.பி 800இல் ஆலம்பாக்கத்து விசையநல்லூரான் தம்பி கம்பன் அரையன் என்பவனால் இக்கிணறு அமைக்கப்பட்டது. இது மார்பிடுகு கிணறு என்றும் அழைக்கப்படுகிறது கீழே செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள படிகளில் தமிழ் எழுத்தில் 1முதல்10 வரை என் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது.  Gangaikonda Choleeswarar Te