மங்களநாடு அருகே சங்ககால ஈமக்காடு மற்றும் வாழ்விடப்பகுதி
அம்பலத்திடல்:
சுப்பிரமணியபுரத்திலிருந்து வடக்கே 6 கி.மீ. தொலைவில் வில்லூனி ஆற்றின் தென்கரையில் அம்பலத்திடல் அமைந்துள்ள. இந்த இடத்தை ஊர் மக்கள் மணமேடு என்று அழைக்கின்றனர். இவிடத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் பரந்த மணல்மேடு காணப்படுகின்றது. இங்கு ஈமக்காடானது 90% மங்களநட்டு பஞ்சாயத்திலும் 10% ராமசாமி பஞ்சாயத்திலுல் அமைந்துள்ளது. இங்கு கருப்பு, கருப்பு சிவப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள்(Red sliped ware & brown slipped ware) சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. வயிற்றுப்பகுதி வரை சிதைந்த பானைகளும், தரைக்கு மேற்பரப்பில் வாட்டவட்டமாக காணப்படுகின்றது.
இதில் சிலவற்றில் குறியீடுகள் கீறல்களாகக் காணப்படுகின்றது. இது பொதுவாக பானையின் களழுத்துப்பகுதிக்கு கீழேயும் பானையின் வெளிப்புறத்திலேயும் அதிகமாக காணப்படுகிறது.
குறியீடு பொறித்த பானையோடு |
இதனுடன் மண்ணால் செய்யப்பட்ட சுடுமண் பாசிமணியும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடம் சித்த மருத்துவர் திரு மதியழகன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு இதன் சிறப்பானது நாளிதழ்களில் வெளிவந்துள்ளது. 03.10.2014இல் வெளிவந்த தினமலர், திருச்சி வெளியீடு, 04.10.2004இல் வெளிவந்த தினகரன், தினமணி திருச்சி வெளியீடு 12.09.2005இல் வெளிவந்த தஞ்சை வெளியீடான தினமலரில் வெளிவந்துள்ளது. இவிடத்தின் தெற்கே 2 ஏக்கர் பரப்பளவில் களிமண்ணால் மெளுகப்பட்ட தரைபகுதி போன்ற அமைப்பு காணப்பட்டது. இங்கும் கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள் காணப்படுகின்றன.
செங்கல் |
ராமசாமிபுரம்:
மங்கள நாட்டிற்கு அடுத்ததாக இதன் தொடர்ச்சியாக காணப்பட்டாலும் இங்கு ஈமப் பொருட்களான முதுமக்கள் தாழிகள் கிடைக்கின்றன. இவ்விரு ஊரையும் ஒரு சிறு நீரோடையானது பிரிக்கிறது.
http://wikimapia.org/m/#lat=10.2174821&lon=79.139569&z=12&l=0&m=b
http://wikimapia.org/m/#lat=10.2174821&lon=79.139569&z=12&l=0&m=b
குறியீடு பொறித்த பானையின் களுத்துப்பகுதி |
Comments
Post a Comment