கீரமங்களம் மெய்நின்றநாத சுவாமி கோயில் கல்வெட்டுச் செய்தி
கீரமங்களம் எனும் ஊர் தற்போதைய புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் வில்லுனி
ஆற்றிற்க்கும் அம்புலி ஆற்றிற்க்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இவ்வூர்
சோழா் காலம் முதல், குறுநில அரசராகள் செயல்பட்டு வந்த காலங்களில் தனவநாடு எனும் நாட்டுப்பிரிவில்
அமைந்திருந்தது தானவ நாட்டின் மையப்பகுதியில் அமைந்திருந்த கிடாரங்கொண்ட சோழபுரம் இந்நாட்டின்
தலைமையிடமாக இருந்ததுடன், ஒரு வணிக நகரமாகவும் இருந்துள்ளது. வணிகா்களான நகரத்தார்கள்
குடியிருந்தப் பகுதிகள் அவா்தம் பெயரால் நகரம் என அன்று தனி ஊராக அழைக்கப்பட்டு தற்போது
இவ்வூர் கீரமங்களத்தின் மேற்கில் உள்ளது. தமிழகத்தில்
இரண்டாம் பாண்டியப் பேரரசின் ஆட்சியின் போது, பல்வேறு சமுதாய நடவடிக்கைளளை அடிப்படையாகக்
கொண்டு எழுதப்பட்ட பல கல்வெட்டுகள் கீரமங்கலம் திருமெய்நின்றநாதா் கோயில் சுவர்களில்
காணப்படுகின்றன. அதில் வணிகக் குழுக்களான பதினெண்
விசயத்தார் மற்றும் நகரத்தார் பற்றி கல்வெட்டுச் செய்திகள் கிடைக்கின்றன.
இப்பகுதியில் வணிகக் குழுக்கள் இருந்ததை இங்குள்ள
கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. புதுக்கோட்டை
மாவட்டத்தில் பெரும்பகுதிகளில் இன்றைக்கு வணிகப்
பெருமக்கள் தங்களை நாட்டுக்கோட்டை நகரத்தார், சுந்தரத்து நகரத்தார், வல்லநாட்டுச் செட்டியார்,
என மூன்று வகைப் பிரிவினராக அழைத்துக் கொள்கின்றனா்.
இங்குள்ள 9 கல்வெட்டுகளில் சடையவர்மன்
சுந்தர பாண்டியனின் கி.பி 1262ஆம் நூற்றான்டைச் சேர்ந்த கல்வெட்டு காலத்தால் முத்தியதாக
உள்ளது. 13ஆம் நூற்றான்டில் கட்டபப்பட்ட இக்கோயில் இறைவன் பெயர் மெய்நின்ற நாயனார் மெய்நின்ற நாதா்,
இங்குள்ள விநாயகர் பிழை பொறுத்த பிள்ளையார் என்றும் பிரகதீசுவரா் கோயில் என அழைக்கப்படுகிறது
. மேலும் உள்ள கல்வெட்டில் நானா தேசம் எனும் குளம் நானாதேசிகள் எனும் வனிகக் குழுக்கலால்
ஏற்படுத்தப்பட்டதும் அதை பின்னாலில் சீரமைக்கப்பட்ட செய்திகளும், ஒப்பந்தங்கள், தற்போதுள்ள சேந்தன்குடி எனும் ஊர்
விற்பனை செய்யப்பட்டது அதற்கான வரி வசூல், இறைவனுக்கு தானமாக கொடுத்த நிலம், தானமாகக்
கொடுக்கப்பட்ட தூன்கள் பற்றிய செங்திகள் கல்வெட்டுச்செய்திகள் இடம்பெற்றுள்ளது.
முதலாவது கல்வெட்டு
சடாவா்மன் முதலாம் சுந்தரபாண்டியனின்
(கி.பி. 1251-1283) 11ஆம் ஆட்சியாண்டில்(கி.பி. 1262) திருமெய்நின்றநாதா் கோயில் மண்டபத்தின்
கிழக்குச் சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு வணிகா் பற்றிய முதலாவது சான்றாகும். கல்வெட்டின் சில வாரிகள் அழிந்துபட்டும், எழுத்து
பொறிக்கப்பட்ட சில கற்கள் மாற்றியமைக்கப்பட்டும் உள்ளன. எனினும் கிடைத்திருக்கும் வரிகள் முக்கியச் செய்திகளைக் காட்டுவனவாக உள்ளன. கோயிலின் தெற்கு நுழைவாயிலில் அமைந்திருக்கும் பிழை
பொறுத்த பிள்ளையார் திருமேனிக்கு வழிபாடு மற்றும் பூசை காரியங்கள் செய்ய பொருள் வழங்குவதற்கு
வணிக் குழுக்களான பதினென் விசயத்தார்களும், நகரத்தார்களும் ஒன்று கூடி அவா்களுக்குள்ளாகவே
அவா்களது விற்பனைப் பொருள்களின் மீது சுங்கவரி
விதிப்பதற்குறியத் தொகையை நிர்ணயம் செய்வதென பல்வேறு
வணிகா்களுக்கிடையில் ஒரு ஒப்பந்தம செய்து கொள்ளப்பட்ட செய்தியைக் கல்வெட்டு கூறுகின்றது.
இரண்டாவது கல்வெட்டு
கோயிலின் விநாயகா் கருவறையின் மேற்குப்
பக்கச் சுவாரில் காணப்படும் பாண்டிய மன்னன் முதல் மாறவா்மன் குலசேகரபாண்டியனின் 38வது
ஆட்சியாண்டுக்(கி.பி.1306) கல்வெட்டு (ARE 1916 :125) பல நகரத்தார்கள் வழங்கிய கொடைகளைப் பற்றிக் குறிப்பிடுவதோடு
இங்கிருந்த நானாதேசம் என்று பெயரிடப்பட்ட குளத்தைச் சீரமமைத்ததையும் குறிக்கிறது. தற்போது
கோவிலுக்கு எதிரே சிவன்சிலை அமைக்கப்பட்டுள்ள குளமே நானாதேச குளம் எனபெயரிடப்பட்டு
கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. நானாதேசம் என்பது
நானாதேசி வணிகக் குழுவினரால் உருவாக்கப்பட்டிருப்பினும் பின்னா் அதை நகரத்தார் சீரமைப்பு
செய்தபோதும் நானாதேசி பெயராலோயே அக்குளம் பெயா் கல்வெட்டில் பொறிக்ப்பட்டுள்ளது நகா்தாரின்
பெருந்தன்மையைக் காட்டுவதாக உள்ளது. இக்கல்வெட்டில்
இறைவன் மெற்நின்ற நாயனார் என அழைக்கப்படுகிறார்.
கோயிலின் முன்பாக தற்போது சிவன் அமைந்திருக்கும் குளமே நானாதேசம் எனக் கல்வெட்டில்
அழைக்கப்பட்டிருப்பது நோக்கத்தக்கது.
மூன்றாவது கல்வெட்டு
மாறவா்மன் முதலாம் குலசேகரபாண்டியனின்
(கி.பி. 1268-1313) 38 ஆவது ஆட்சியாண்டில் (கி.பி. 1306) கருவறையின் தென்புறம் குமுதப்பட்டையில்
பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டில் தாவை நாட்டில் கிராடங்கொண்ட சோழபுரத்தின் கிழக்கில்
குக்கிராமமான கீரமங்கலத்தில் உள்ள அரசமிக் காமன் பெருந்தெருவில் பல்வேறு இடங்களிலிருந்து
நகரத்ததார்கள் கூடி செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தைப் பற்றி இக்கல்வெட்டுக் கூறுகின்றது.
நான்காவது கல்வெட்டு
கோயிலின் தென்மேற்கில் அமைந்திருக்கும்
விநாயகா் கருவறையின் பின்புறச்சுவாரில் காணப்படுகிறது. இது அதே மாறவா்மன் முதலாம் குலசேகரப் பாண்டியனின்
41 ஆம் ஆட்சியாண்டைச் (கி.பி.1309) சோ்ந்தது இக்கல்வெட்டில் ஒரு நில விற்பனை பதிவு
செய்யப்பட்டருக்கின்றது. அதாவது செயசிங்க குலகால
வளநாட்டுத் தென்னச் சீனத்துத் தானவ நாட்டில் உள்ள சோழசிகாமணிபுரம் என்ற கண்டியூரின்
மேற்கில் உள்ள சிற்றுாரான செங்கமங்கலத்து ஊரார்கள் கீரமங்கலம் அரசமிக்காமல் பெருந்தெருவில்
வசித்து வந்த நகரத்தார்களுக்கு சேந்தன்குடிகாடு என அழைக்கப்பட்ட நிலம் விற்பனை செய்யப்பட்டது.
அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலத்தின் மீதான நிலுவை வரியைச் செலுத்துவது பொருத்தே இவ்விற்பனை
நிகழ்கிறது. கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்
40 ஆண்டுகால நிலுவை வரிக்கு(TAX) ஊரார்களே
பொறுப்பாளர்கள் ஆவர் என்றும் செய்தி இடம்பெற்றுள்ளது.
சேந்தன்குடிகாடு என்பது தற்போதுள்ள சேந்தன்குடி என்பது குறிப்பிடத்தக்கது.
கோயிலின் மண்டபத்தின் தென்புறச் சுவா்
குமுதப்பட்டி கல்வெட்டு வாசகம்.
மாறவா்மன் முதலாம் குலசேகரப் பாண்டியனின்
காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இதில் இறைவன் மெய்நின்ற நாயனார்க்கு வேம்பங்குடியில்
உள்ள நிலம் தானமாகக் கொடுக்கப்பட்ட செய்தி இடம் பெற்றுள்ளது
1.
கோமாற
பண்மரான திருபுவன சக்கரவத்திகளுக்கு வீர சேகர சேகர தேவா்க்கு யாண்டு அஞ்சாவது செயசிங்ள
நாட்டுத் தென்னாச்சனத்துத் தானவநாட்டு கீரமங்கலத்து உடையார் வாழவந்த ஈசுரமுடைய நாயனார்க்கு
இவ்வூா் அரசு மழை.. தான் வாழவந்த பெருமாளான எழுந்தருளப்பண்ணிவித்த மதுராந்தகன் பெருமாளான
குளோத்துங்க சோழ தானவதரயா் திருநாமத்து.
2.
கானியாக
கொடுத்த வேம்பங்குடி குளத்து உள் வாயில் மேற்கே வயல் பிள்ளையார் சுந்தரபாண்டிய தேவா்..
3.
திருவாய்கழியும்
திருமும் புறப்பட்டபடியே என வரையும் அருளுப்பாடு இட்டு இன்னாயானார் திருமுன்பே இறையிலியாக நீரும் நீா்வார்த்துக்கொடுமென்று திருவாய் மலா்ந்தருளுகையில்
நாமும் இப்படியே சந்திராதித்தவன் இந்நாயனாருக்கு காரண்கிழமையாக இறையிலி செய்து கொடுத்த
இக்குடிக்காட்டுப் பெருநான் கெல்லையாவது கீழ்பார்க்கெல்லை தானன் வயக்கல் கீழ் வாமத்துக்கு
மேற்கும் தென்பார்கெல்லை கிழக்கு நோக்கிப்போகிற வரை.
4.
லைகடகு
வடக்கும் மேல்பா்கெல்லை பெருங்காட்டுக்குக் கிழக்கும் வடபார்க்கெல்லை பெருமாள் பிள்ளை
நத்தத்துக்கு போகா் பெருவழிக்கு தெற்காக இந்த பெருநான்கெலலைக்குட்பட்ட..க் காடு இன்நாயனாரு..
ரான கிழமையாக இறையிலி செய்து கொடுத்தோம் இந்நாளனார் உடையார் வாழவந்த ஈஸ்வரமுடையார்க்கு
வாழவந்த பெருமாளான சுந்தரபாரண்டிய தானவதரையனேன்.
இக்குடிக்காடு அந்தராயன் கோமுற்றம் பெறமற்றுமுள்ளவன் போகங்களுக்குட்பாடி பெட்டிட்ட
5.
வம் இறையிலி செய்து கொடுத்தேன் இப்படிக்கு இவை சுந்தர
பாண்டிய தானவதரைனெழுத்து இப்படிக்கு இவை … கணக்கு அரங்குளவா் எழுத்து குலோத்து க… கனெமுத்து
அ கியனான மதுராந்தக விழுப்பரைனெழுத்து சிற்றன் தானனான அபிமானி ராமப் பல்லவதரையனெழுத்து.
கீழுள்ள கல்வெட்டுகள் யாவும் தானமாகக்
கொடுக்கப்பட்ட தூன்கள் பற்றிய செங்திகள் தூன்ளின்
மேல் பொறிக்கப்பட்டுள்ளது.
அம்மன் பிரகாரம் முன்பாக நுழைவு வாயிலின் இடது புறம்
1.
ஸ்வஸ்தி
ஸ்ரீ ராசநாரா 5. நந்தவனப்பெரு
2.
யணபுத்துத்
திரு 6. மாள்
3.
வேட்பருடையான்
தி 7.தன்மம் கு…
4.
ருவன்
கண்டனான 8. ..யன்
இரன்டாவது தூன்
மேலே குறிப்பிட்ட துாணுக்கு எதிரில் வலதுபுறம் உள்ள துாண்
1.
ஸ்வஸ்தி
ஸ்ரீ திறு 4 காவுடையானட
2.
வரம்பூா்
கிழவ 5. தன்மம்
3.
ன் திருவானைக்
இடது புறம் 4வது
துாண்(தற்போது பிள்ளையார்கோயிலின் இடப்பக்க தூன் பின்பக்கம்.)
1.
ஸ்வஸ்தி ஸ்ரீ நியமத்துச் 4 ன் திருவையாறுடை
2.
செற்றுடையார்
திரு 5. யார் தன்மம்
3.
ச்சிறம்பலமுடையா
சுவாமி கோயிலின் மண்டபத்தில் வலது புறம் முதல் துாண்
1.
ஸ்வஸ்தி ஸ்ரீ இந்த 4 … ழங்கைக்கண்ணி
2.
கல் அண்ஒட்டு 5. ….யையார் உடை
கடல் கடந்து வியாபாரம் செய்த வணிகக் குழுக்கள் ஆலக்குடி,
கலசக்காடு, கீரமங்கலம் ஆகிய இ்டங்கள் தங்கி இருந்ததும் இவ்வாற்றுப் பகுதியில் வணிகம்
மேற்க்கொண்டதும் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது. மேலும்
நானாதேசத்தாரும், நகரத்தாரும் சமூகப் பணிகாக பல அறச்செயல்களையும் செய்துள்ளனா்
என்பதையும் அறியமுடிகிறது. கீரமங்கலம் மெய்நின்றநாதா்
கோயிலின் வழிபாட்டிற்கும், பூசை பணிகளுக்கும் வழிவகை செய்தனா். மேலும் இது பொன்ற அறப்பணிகளுக்கான செலவை ஈடு செய்ய
வியாபாரப் பொருட்களின் மீது தாங்களாகவே வரிவதிப்பு செய்து கொண்ட நிகழ்ச்சி கீரமங்கலம்
ஒரு விற்பனைச் சந்தையாக அந்தக்காலத்தில் இருந்தது. ( இன்றும் இருந்து வருகிறது) என்பதையும்
கருத்தில் கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment