கார்பன் டேட்டிங்க் என்றால் என்ன ?
கனகவல்லி என்ற பள்ளி மாணவி அவள் குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் மிட்டாய் கொடுத்தாள். அனைவரும் மிட்டாய் எடுத்துக் கொண்டு “ உனக்கு பிறந்தநாளா” என்று கேட்டார்கள். “இல்லை ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களை கார்பன் டேட்டிங் முறையில் சோதித்ததில் தமிழர் நாகரீகம் 3000 ம் ஆண்டு பழமையானது என்று நிருபிக்கப்பட்டுள்ளது ” என்றாள். இதைக் கேட்டு அனைவரும் அவளுக்கு வாழ்த்து சொன்னார்கள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கனகவல்லியின் அம்மா உனக்கு இது தேவையில்லாத வேலை” என்று எச்சரித்தார். “அம்மா நாம் யாரையாவது எந்த கலாச்சாரத்தையாவது குறை சொன்னோமா. நம் கலாச்சாரத்துக்கு ஒரு அறிவியல் அடிப்படை ஆதாரம் கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியை தெரிவிக்கிறோம் அவ்வளவுதானே” என்று பதில் சொல்லிவிட்டாள். இப்படி அனைவருக்கும் மிட்டாய் கொடுத்து வரும் போது அவளுக்கு பிடித்த ரிச்சா ஆண்டிக்கும் மிட்டாய் கொடுத்தாள். ரிச்சா ஆண்டி செய்தியைக் கேட்டு பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தெரிவித்து விட்டு கனகவல்லியிடம் “சரிப்பா Carbon dating carbon dating என்று சொன்னாயே கார்பன் டேட்டிங்க் என்றால் என்ன? “ “சத்தியமா எனக்கு த