Posts

தஞ்சாவூர் மாவட்ட தொல்லியல் செய்திகள்

Image
ஒரத்தநாடு முத்தாம்பாள் சத்திரம் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்படும்     தஞ்சை அரண்மனை கட்டப்பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்பு அரைக்கும் கருங்கல் சக்கரம் காவிரியின் நீரோட்டம் கோடையிலும் இருந்ததை அறிய முடிகிறது .   02.09.2019 தினமணி ப-4 தஞ்சை மராட்டியர் மன்னர்கள் சமாதி தஞ்சாவூர் மாவட்டம் உடையாளூரில் உள்ளது மாமன்னன் இராஜராஜ சோழன் சமாதியா தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆய்வு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு முத்தாம்பாள் சத்திரம்  அழிந்து வரும் கலைச்சின்னம் எனும் செய்தி   அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் புகைப்பட கண்காட்சி தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு போலீசார்  பந்தனல்லூர் சிலைகள் மாறியது தொடர்பாகவும் ஆய்வு

ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம்

Image
ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் ஒரத்தநாடு தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ளது. இங்கு ஆய்வுசெய்யப்பட்ட முத்தம்மாள் சத்திரம் 10 ° 37’ 40.2” வடக்கு அட்சரேகையிலும் , 79 ° 15 ′ 07.5 ″ கிழக்கு தீர்க்கரேகையிலும் அமைந்து ள்ளது . இவ்விடம் தஞ்சாவூரிலிருந்து உளூர் வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் 35 கி.மீ தொலைவில் உள்ளது . காவிரியின் தென்கரையில் உள்ள இவ்வூர் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஊராக மராட்டியர் ஆட்சி காலத்தில் தலைத்தோங்கி இருந்தது. ஒரத்தநாடு நகர அமைப்பானது 18, 19 ஆம் நூற்றாண்டில் திட்டமிட்டு கட்டப்பட்டது இதில் இன்றும் இந் நகரத் தெருக்கள் ஒன்றோடு ஒன்று வெட்டிச்செல்வதைக் காணமுடிகிறது. இங்கு காசி விசாலாட்சி, உடனுறை காசிவிஸ்வநாதர் ஆலயம், முத்தம்மாள் சத்திரம், அன்னச்சத்திரம், சவுக்கண்டி, வீரஆஞ்சநேயர் கோயில் மற்றும் தேர் முட்டிகள் என வரலாற்று எச்சங்கள் உள்ளன.   தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய அரசர்கள் 1743 முதல் 1837 வரை பெரிய, சிறிய சத்திரங்களை தஞ்சாவூர் முதல் தனுஷ்கோடி வரை அமைத்தனர். இவற்றில் தஞ்சாவூர் - காஞ்சி வீடு சத்திரம், சிரேயஸ் சத்திரம், சூரக்கோட்ட...

மாடு உரசும் கல்

Image
மாடு உரசும் கல் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம்  சூரன்விடுதி அருகே  கிடைத்த மாடு உரசும் கல். இந்தக் கல் கருமணி குளத்திற்கு அருகே தற்போதுள்ள புதுஊரணியில் கிழக்குக் கரையில் மண்ணில் புதைந்து இருந்தது. இந்தக் குளக்கரையில் மேய்ச்சலுக்கு சென்று வரும் மாடுகள் இக்கல்லில் உடம்பை தேய்த்துக்கொள்வதற்காக வைக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது. பொதுவாக உயர்ந்த மரங்கள் காட்டுப்பகுதியில் ஆடு மாடுகள் மரத்தில் உரசிக்கொள்ளும் நிகழ்வினை நாம் காணமுடியும். தற்போது சுவர்களிலும் வீட்டு ஓரங்களிலும் வயிற்றை தேய்த்துக்கொள்ளும் கால்நடைகளை நாம் பார்த்திருப்போம். அதன் சிரமத்தை கண்ட இரக்ககுணம் கொண்ட நம் மூதாதையர்கள் இது போன்ற கல்லை தானமாக வைதுள்ளனர். கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டத்தில் இது போன்ற கல் இதுவரை கண்டறியப்பட்டு உள்ளது இதனை " தொறுக்கல்", "ஆ உராஞ்சிக்கல்", "ஆ தீன்று குற்றி" எனவும் இங்கு குறிப்பிடுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கல் கண்டறியப்பட்டு அடையாளப்படுத்தப் பட்டுள்ளது. நச்சாந்துப்பட்டி அருகே உள்ள பிற்காலத்தை சே...

சுண்ணாம்புக் காரை அரைக்கும் கல் சக்கரம்

Image
சுண்ணாம்புக் காரை அரைக்கும் கல் சக்கரம் தர்பார்மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுண்ணாம்புக்காரை அரைக்கும் கருங்கல் சக்கரம் இயற்கையில் கிடைத்த சுக்கான் பாறைகள், சுக்கான் கற்களை சுட்டு அதனை சுண்ணாம்புக் காரைகளாக (lime mortar) தயாரிக்க கருங்கல் செக்குகள் பயன்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் கருங்கல் கட்டடங்களுக்கு முன்னா் செங்கல்லால் கட்டப்பட்ட கட்டடங்கள் இருந்துள்ளன. ஏழாம் நூற்றாண்டு கருங்கல் கட்டடங்கள் அதற்கு முன் இருந்த செங்கல் கட்டடங்களின் மாதிரிகள் தான் என்பதில் ஐயமில்லை. கருங்கல் சுவருக்கு அதன் மேல் சுண்ணாம்புக் காரையால் பூசவேண்டிய தேவை இல்லை. ஆனால் செங்கல் சுவர்களுக்கு சுண்ணாம்புக் காரையால் பூசுவது இன்றியமையாதது.             சுண்ணாம்புடன் மணல்கலந்து அதனைக் கருங்கல் சக்கரத்தில் அரைப்பர். 50 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட நடைமுறையில் இருந்துவந்த இந்த முறை சிமெண்டின் (cement) வருகையால் தற்போது வழக்கொழிந்துவிட்டது. அரைத்த சுண்ணாம்புக்காரை சிலநாட்கள் புளிக்கவைத்து பின்னரே பயன்படுத்தப்படும். காளை பூட்டியும் மனிதர்களைக் கொண்டு...