மாடு உரசும் கல்

மாடு உரசும் கல்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம்  சூரன்விடுதி அருகே  கிடைத்த மாடு உரசும் கல். இந்தக் கல் கருமணி குளத்திற்கு அருகே தற்போதுள்ள புதுஊரணியில் கிழக்குக் கரையில் மண்ணில் புதைந்து இருந்தது.

இந்தக் குளக்கரையில் மேய்ச்சலுக்கு சென்று வரும் மாடுகள் இக்கல்லில் உடம்பை தேய்த்துக்கொள்வதற்காக வைக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது. பொதுவாக உயர்ந்த மரங்கள் காட்டுப்பகுதியில் ஆடு மாடுகள் மரத்தில் உரசிக்கொள்ளும் நிகழ்வினை நாம் காணமுடியும். தற்போது சுவர்களிலும் வீட்டு ஓரங்களிலும் வயிற்றை தேய்த்துக்கொள்ளும் கால்நடைகளை நாம் பார்த்திருப்போம். அதன் சிரமத்தை கண்ட இரக்ககுணம் கொண்ட நம் மூதாதையர்கள் இது போன்ற கல்லை தானமாக வைதுள்ளனர். கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டத்தில் இது போன்ற கல் இதுவரை கண்டறியப்பட்டு உள்ளது இதனை "தொறுக்கல்", "ஆ உராஞ்சிக்கல்", "ஆ தீன்று குற்றி" எனவும் இங்கு குறிப்பிடுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கல் கண்டறியப்பட்டு அடையாளப்படுத்தப் பட்டுள்ளது. நச்சாந்துப்பட்டி அருகே உள்ள பிற்காலத்தை சேர்ந்த ஒரு கல்வெட்டில் மட்டும் மாடு உரசும் கல் என எழுத்து பொறிக்கப்பட்டு உள்ளது.

தற்போது கிடைத்த கல்வெட்டானது காலத்தால் பிற்பட்டது என்றாலும் இதில் எழுத்து இடம்பெறுவதற்கு மேல்பகுதியில் மாட்டின் உருவம் கோட்டுருவமாக காட்டப்பட்டு உள்ளது. அதன் வயிற்றில் விரல் தொடும் அளவிற்கு சிறு குழி ஒன்று உள்ளது. இது மாட்டை மனிதர்கள் சொறிந்து விடுவதன் குறியீடாக எடுத்துக்கொள்வதாக அமைகிறது. ஒரு காலத்தில் சூரன் விடுதி, கீழாத்தூர், மேலத்தூர் ஒட்டிய இந்த இடம் அடர்ந்த காடுகள், பெரிய மரங்கள் இன்றி  ஒரு மேய்ச்சல் நிலமாக இருந்திருக்கவும் மேலும், மேய்ச்சலுக்கு வந்த கால்நடைகள் கருமினி குளம், புதுஊரணியில் இருந்த நீரினை  அருந்துவிட்டு ஓய்வெடுக்கும் நேரங்களில் இந்தக் கல்லில் தனது உடம்பை தேய்த்து சொரிந்து கொண்டுள்ளது.

புதூரணியின் கிழக்கு கரையில் மண்ணில் மூடி இருந்த 7 அடி நீளம் 1 அடி அகலம் கொண்ட தூண் போன்ற கல்லில் எழுத்து இருந்தது. 

11வரிசையில் எழுதப்பட்ட இக்கல்வெட்டில் சூரன் விடுதியை சேர்ந்த சு.ரெ. நாடியான் ஆசாரியின் பொண் சாதி (மனைவி) முத்தாயி என்றுள்ளது. 1917 சூன் மாதம் 17 ஆம் தேதி இந்த மாடு உரசும் கல்லினை தானமாக வைக்கப்பட்டதாக செய்தியினைக் கொண்டுள்ளது. இந்த செய்தி கணவர் நினைவாக மனைவியும் கொடுத்திருக்கலாம்

கால்நடைகள், மேய்ச்சல் நிலம் குறைந்துவரும் இக்காலக்கட்டத்தில் இது போன்ற கால்நடைகளுக்கான நினைவுக் கல்லையும் கல்வெட்டுகளையும் பதிவு செய்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.

Comments

Post a Comment

Popular posts from this blog

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொண்ட அகழாய்வு

கல்வெட்டு ஆராய்ச்சிக்கு படிப்பு

சுண்ணாம்புக் காரை அரைக்கும் கல் சக்கரம்