தஞ்சாவூர் மாவட்டத்தில் தொல்லியல் சான்றுகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொல்லியல் சான்றுகள் பழையகற்காலம் இராபர்ட் புரூஸ்புட் அவர்கள் தமிழகத்தில் பல இடங்களில் கற்காலக் கருவிகளைக் கண்டுபிடித்தார் , அவர் தஞ்சாவூர் பகுதியில் வங்கானங்குடிகாடு எனும் இடத்தில் கற்காலக் கருவி கிடைத்ததாக க் குறிப்பிடுகின்றார் . தற்போது மேற்கொண்ட ஆய்வுகளில் தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பல இடங்களில் குறைந்த தரமுள்ள செர்ட்டி குவார்ட்சைட் கற்களால் செய்யப்பட்ட பழங்கற்காலக் கருவிகள் கிடைக்கின்றன , இவை பழங்கற்கால மக்கள் பரவலாக இப்பகுதியில் வாழ்ந்ததை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன . புனல்குளத்தில் கிடைத்த கருவி பழையகற்காலம் 1 புனல்குளம் ( மகாராஜசமுத்திர வட கரையில் ) தஞ்சாவூர்/புதுக்கோட்டை பழையகற்காலக் கருவிகள் 2 மனோஜிபட்டி தஞ்சாவூர் பழையகற்காலக் கருவிகள் , தொழிற்கூடம் 3 பிள்ளையார்பட்டி தஞ்சாவூர் பழையகற்காலக் கருவிகள் 4 திருக்கானூர்பட்டி தஞ்சாவூர் பழையகற்காலக் கருவிகள்